மாநகரப் போலீஸாரை கண்டித்து திருச்சி நீதிமன்றம் முன்பு திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்த வழக்குரைருக்கும்,போலீஸருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மலைக்கோட்டை அருகேயுள்ள அரபிக்குளம் தெருவில் கடந்த மாதம் 23-ம் தேதி ஒரு வீட்டின் சுவர் மீது ஏறி குதித்த ரௌடி குணாவை பொதுமக்கள் தாக்கி கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீஸôர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த குணா, கடந்த வாரம் தனது கூட்டாளிகளுடன் மலைக்கோட்டை, பீரங்கிக்குளம் தெருவில் வசிக்கும் தொழிலதிபர் ஆறுமுகம் வீட்டுக்கு சென்று அங்கு அவரது மனைவியிடம் ஆயுதங்களை காட்டி ரூ.3 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். இது தொடர்பாக ரௌடி குணா, அவரது வழக்குரைஞர் ராஜேந்திரகுமார் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
வழக்குரைஞர் ராஜேந்திரகுமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை, திருச்சி வழக்குரைஞர் சங்கம் மற்றும் திருச்சி குற்றவியல் வழக்குரைஞர்கள் சங்கம், கண்டனம் தெரிவித்தது, திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்திருந்தனர்.அதன்படி திங்கள்கிழமை காலை திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்குரைஞர்கள் சங்கங்களின் தலைவர்கள் சேசு பால்ராஜ், மார்ட்டின் ஆகியோர் தலைமையில் வழக்குரைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து அவர்கள் மாநகரப் போலீஸாரை கண்டித்து கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது கன்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர் கணேசன், போலீஸ் வாகனத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற இடத்தின் அருகில் உள்ள வாசல் வழியாக நீதிமன்றத்தினுள் செல்ல முயன்றார். அப்போது போலீஸ் வாகன ஓட்டுநர் திலக் வாகனத்திலிருந்து ஒலி எழுப்பியுள்ளார்.உடனே வழக்குரைஞர்கள், காவல் உதவி ஆணையர் கணேசனின் வாகனத்தை, முற்றுகையிட்டு, இங்கிருந்து உடனே செல்லுமாறு கோஷம் எழுப்பினர். அப்போது ஓட்டுநர் திலக் வழக்குரைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நிலைமை விபரீதமாவதை உணர்ந்த சில வழக்குரைஞர்களும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸôரும், உதவி ஆணையர் கணேசன், போலீஸ் வாகன ஓட்டுநர் திலக்கை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.இதற்கிடையே காவல் உதவி ஆணையர் கணேசனை நீதிமன்றத்தினுள்ள காவல் நிலையத்தில் இறக்கி விட்ட ஓட்டுநர் திலக் தனது சீருடையை கழற்றி விட்டு சாதாரண உடையில் உண்ணாவிரதம் இருந்த பகுதிக்கு வந்தார்.அங்கு தன்னிடம் அவதூறாக பேசிய வழக்குரைஞரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வழக்குரைஞரை தாக்கவும் முயன்றார். இதனால் வழக்குரைஞர்கள் சிலர் ஓட்டுநர் திலக்கை திடீரென தாக்கினர். அவருக்கு உதடு கிழிந்தது.
பலத்தகாயம் அடைந்த திலக்கை, சக போலீஸார் மீட்டு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் ஓட்டுநர் திலக்கை தாக்கிய வழக்குரைஞர்கள் பொன்.முருகேசன், ராத்தே தியாகராஜன்,சரவணன்,விஜயகுமார்,தினகரன் ஆகிய 5 பேர் மீது போலீஸார் 7 பிரிவுகளில் வழக்குப் பதிந்தனர். இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - விருச்சிகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

