குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

வங்கி கணக்கு இல்லாத குடும்பத்தினர் உடனே தொடங்க வலியுறுத்தல்

விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் வங்கி கணக்கு திட்டத்தில் இதுவரையில் தொடங்காதவர்கள் கணக்கு தொடங்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக முன்னோடி வங்கி மேலாளர் க.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:40 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் வங்கி கணக்கு திட்டத்தில் இதுவரையில் தொடங்காதவர்கள் கணக்கு தொடங்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக முன்னோடி வங்கி மேலாளர் க.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பாரத பிரதமர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வங்கி கணக்குகளை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் வங்கிக் கிளைகள் அனைத்தும் கடந்த ஆக.16ம் தேதி முதல் வங்கி கணக்குகள் இல்லாதவர்களுக்கு தொடங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு அந்தந்த விவகார எல்லைக்கு உள்பட்ட வங்கிகளின்  கணக்கெடுப்பின் படி அனைத்து குடும்பத்தினரும் கணக்கு தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இதையடுத்து இம்மாவட்ட வங்கி கலந்தாய்வுக்குழுவும் வருகிற 24-ம் தேதி 100 சதவீதம் இலக்கை அடைந்து விட்டதாக அறிவிக்கவும் முடிவு செய்துள்ளது. எனவே இதுவரையில் தொடங்காதவர்கள் உடனே மேற்குறிப்பிட்ட நாள்களுக்கு முன்னதாகவே வங்கி கிளை அலுவலர்களை அணுகி கணக்குகளை தொடங்கும் படி அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.