குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

விருதுநகர்-நெல்லை இடையே புதிய மின் வழிப்பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் ஆய்வு

விருதுநகரில் இருந்து நெல்லை-தூத்துக்குடி வரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின் மயமாக்கப்பட்ட பாதையில் சிறப்பு ஆய்வு ரயில் மூலம் ரயில்வே பாதுகாப்பு துறை ஆணையாளர் உள்ளிட்ட தொழில்

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:38 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் இருந்து நெல்லை-தூத்துக்குடி வரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின் மயமாக்கப்பட்ட பாதையில் சிறப்பு ஆய்வு ரயில் மூலம் ரயில்வே பாதுகாப்பு துறை ஆணையாளர் உள்ளிட்ட தொழில் நுட்ப அலுவலர்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

விருதுநகர்-நெல்லை-தூத்துக்குடி வழித்தடத்தில் மின்பாதை அமைக்கும் பணி 2010ல் தொடங்கி, தொடர்ந்து இந்தாண்டில் பணிகள் முடிவடைந்துள்ளது. இப்பாதையில் தென்னக ரயில்வேயின் பாதுகாப்பு ஆணையாளர் சதீஸ்குமார் மித்தல் உள்ளிட்ட அதிகாரிகள் சிறப்பு ரயில் மூலம் விருதுநகர் ரயில்வே நிலையத்திற்கு 9.40-மணிக்கு வந்தார்கள். அப்படியே அந்த வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்வழிப்பாதை சமமாக உள்ளதா என்றும், இடைப்பட்ட பகுதிகளான மருளூத்து, பட்டம்புதூர், துளுக்கப்பட்டி ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலங்களையும் ஆய்வு செய்தார். மேலும், ஆளில்லா ரயில்வே கேட் பகுதியில் கடந்து செல்வதற்கான சாலை, அபாய வளைவு பகுதிகளையும் இறங்கி பார்வையிட்டார். அதையடுத்து, சாத்தூர் பகுதியில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டுச் சென்றனர்.   

அப்போது, சிறப்பு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு துறை ஆணையாளர் சதீஸ்குமார் மித்தல் உடன், மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி,  கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் அஜித்குமார், ரயில் இயக்கக மேலாளர் எஸ்.டி.ராமலிங்கம் உள்ளிட்ட தொழில் நுட்ப அலுவலர்கள் அடங்கிய குழுவினர் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.