விருதுநகர் மண்டல அரசு போக்குவரத்துக்கழக பணிமனை வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் மாவட்ட துணைப் பொதுச்செயலாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். இதில், நிறுத்திவைக்கப்பட்ட 14-மாதத்திற்கான அகவிலைப்படியை உடனே வழங்கவும், தினக்கூலி பணியாளர்களுக்கு ஒப்பந்தப்படி நாள்தோறும் கூலி வழங்கவும் மற்றும் ஏற்கனவே கடந்த ஜூலை-22, டிச-2 ஆகிய நாள்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.