சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லீம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் கருப்பு சட்டை அணிந்து

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:36 am

எஸ். பாண்டியன்

பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லீம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் கருப்பு சட்டை அணிந்து சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்டனர்.

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே மூளிப்பட்டி அரண்மனை வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட தலைவர் எம்.எஸ்.முஹம்மது இப்ராஹூம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.காதர்பாட்ஷா, மாவட்ட பொருளாளர் எஸ்.அப்துல்கரீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் பி.எஸ்.ஹமீது, பெரியபள்ளிவாசல் ஜமாத் தலைவர் முஹம்மது எகியா, வழக்குரைஞர் தங்கராஜ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். இதில், பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லீம்களிடம் ஒப்படைக்க வேண்டும், பாபர் மஸ்ஜித்தை இடித்த குற்றவாளிகளை தண்டிக்கவும், உச்சநீதிமன்றம் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் தேனிவசந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வெ.தமிழரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.