சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

பாபர் மசூதி இடிப்பு தினம்: விருதுநகர் ரயில் நிலையத்தில் போலீஸார் குவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் ரயில் நிலையம், முக்கிய வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் 1000 போலீஸார்.....

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:35 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் ரயில் நிலையம், முக்கிய வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் 1000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், முக்கிய வழிபாட்டு தலங்கள் பொதுமக்கள் கூடுமிடங்களில் 5 வெடிகுண்டு நிபுணர் குழு மூலம் ஆய்வு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாபர் மசூதி இடிப்பு தினம் (டிச.6ம் தேதி) முஸ்லீம்களால் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனால் அன்றைய நாளில் அசம்பாவிதச் சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸார் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், இம்மாவட்டத்தில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ஆண்டாள் கோயில் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டு தலங்களில் வெடிகுண்டு நிபுணர் குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விருதுநகரில் பழைய பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், பராசக்தி மாரியம்மன் திருக்கோயில், சிவன்கோயில் உள்ளிட்ட பொதுமக்கள் கூடுமிடங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின் பேரில் 1 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 1 உதவி கண்காணிப்பாளர், 6 துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 890 போலீஸார் மற்றும் 100 சிறப்பு அதிரடிப்படை போலீஸாரும் என 1000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாகவும், 11 முக்கிய இடங்களில்  வாகன தணிக்கை செய்யவும் உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

மேலும், ரயில் நிலையத்தில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகள் மற்றும் சரக்கு ரயில்களில் பார்சல் உள்ளிட்டவைகளில் தீவிரச் சோதனை செய்வதற்காக ரயில்வே காவல் நிலையத்தினர், ரயில்வே பாதுகாப்பு படையினர் ஆகியோர் 2 ஆய்வாளர்கள், 3 சார்பு ஆய்வாளர்கள தலைமையில் 20 பேர் வரையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர. இதேபோல், ரயில் தண்டவாள இருப்பு பாதையை கண்காணிப்பதற்காக 21 இடங்களில் நடமாடும் ஆய்வுக்குழுவினர் பாதுகாப்பு பணியில் உள்ளதாக ரயில்வே காவல் நிலையத்தினர் தெரிவித்தனர்.           

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.