எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

விருதுநகர் அருகே கருந்திரிகள் உராய்வினால் தீ விபத்து: பள்ளி மாணவன் சாவு

விருதுநகரை அடுத்த ஆர்.ஆர்.நகர் அருகே டி.சேடபட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி(40). இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் மனைவி உள்ளிட்டோர்

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:35 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே கருந்திரிகளை தயாரித்த போது ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவன் இன்று காலையில் உயிரிழந்தான்.

விருதுநகரை அடுத்த ஆர்.ஆர்.நகர் அருகே டி.சேடபட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி(40). இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் மனைவி உள்ளிட்டோர் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளுக்கு வெள்ளைத்தாள் சுற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதேபோல் கடந்த 30ம் தேதி மாலையில் தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக தயாரித்த கருந்திரி கட்டுக்களை வீட்டின் ஓரப்பகுதியில் வைத்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர் பாரதவிதமாக கருந்திரி கட்டுக்களில் உராய்வு ஏற்பட்டு திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

இதில், அப்பணியில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணசாமியின் மனைவி பாக்கியலட்சுமி(35), இவர்களது 3-ம் வகுப்பு படிக்கும் மகன் யோகிராம்(8) ஆகியோர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிறப்பு தீக்காய பிரிவில்  சிகிச்சை பெற்று வந்தனர். அதில், அவரது மகன் யோகிராம் சிகிச்சை பலனின்றி காலையில் உயிரிழந்தான். இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.