இம்மாவட்டத்தில் ஊரக பகுதிகளிலோ, நகராட்சி பகுதிகளிலோ வறுமையில் வாழ்ந்து வருகிற, சொந்த நிலம் வைத்திருக்கிற கைத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும் பசுமை வீடு அமைப்பதற்கு ரூ.2.60 லட்சம் அரசு முழு மானியம் வழங்குகிறது. இந்த வீடு 365 சதுர அடி பரப்பளவில் பிரதான அறை, படுக்கை அறை, சமையல் அறை, மழை நீர் சேகரிப்பு அமைப்பு, சுகாதார வளாகம் மற்றும் தாழ்வார வசதியுடன் அமைக்கப்பட இருக்கிறது. இதன் அடிப்படையில் இத்திட்டம் 2013-14, 2014-15 ஆண்டு வரை அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர் ஆகிய ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், இந்தாண்டு 225 வீடுகள் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.5.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் 24 வீடுகள் முழுமை அடைந்துள்ளதாகவும், 201 வீடுகளுக்கு நிர்வாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.