ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விருதுநகரில் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தை மாற்ற எதிர்ப்பு

விருதுநகரில் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தை எக்காரணம் கொண்டும் மாற்றக் கூடாது என்பதை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் சங்கத்தின் நீதிமன்ற வளாகம் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் செவ்வாய்கிழமை

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:51 pm

எஸ். பாண்டியன்

விருதுநகரில் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தை எக்காரணம் கொண்டும் மாற்றக் கூடாது என்பதை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் சங்கத்தின் நீதிமன்ற வளாகம் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் செவ்வாய்கிழமை ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தை, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாற்றுவதற்கு மாவட்ட நிதீபதி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் இங்குள்ள மகளிர் நீதிமன்றத்தை மாற்றக் கூடாது என்பதை வலியுறுத்தி  செயலாளர் மணிகண்டன் தலைமையில் நீதிமன்ற வளாகம் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினர். இதனால் வழக்குரைஞர்கள், வாதி மற்றும் போலீஸார் உள்ளிட்டோர் வழக்கு நடத்துவதற்காக 50-கி.மீ தூரம் வரையில் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

இதனால், அலைச்சல், நாள் விரையம் மற்றும்   போக்குவரத்து செலவு அதிகம் ஆகும். மேலும், பெண்கள் எளிதில் சென்று வரமுடியாது. இதுபோன்ற காரணங்களால் மையப் பகுதியில் செயல்பட்டு வரும் மகளிர் நீதிமன்றத்தை மாற்றவே கூடாது என போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தி்ல் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.