ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விருதுநகரில் சிறுமி திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நடவடிக்கை

விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகள் முனீஸ்வரி(17). இவருக்கும், சூலக்கரை அருகே உள்ள மீசலூர் கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் பால்பாண்டி(23) என்பவருக்கும் புதன்கிழமை

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:45 pm

எஸ். பாண்டியன்

விருதுநகரில் நடைபெற இருந்த சிறுமியின் திருமணம் அதிகாரிகளால் செவ்வாய்கிழமை இரவு தடுத்து நிறுத்தப்பட்டது.

விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகள் முனீஸ்வரி(17). இவருக்கும், சூலக்கரை அருகே உள்ள மீசலூர் கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் பால்பாண்டி(23) என்பவருக்கும் புதன்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இது குறித்து செவ்வாய்கிழமை மாலையில் ஆட்சியருக்கு சிறுமியின் திருமணம் குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரனுக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன் அடிப்படையில் சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தும்படி மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிக்கும், காவல் பெண்கள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கும்  உத்தரவிட்டார். அதையடுத்து, சமூக நலத்துறை அலுவலர் பாண்டியம்மாள், ஆலோசகர் உள்ளிட்டோர் பாண்டியன் நகரில் உள்ள மணமகளின் வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் செய்வதற்காக மணமகன் வீட்டு உறவினர்கள் வந்திருந்தனர்.

இந்நிலையில் இருவீட்டாரின் தந்தை மற்றும் தாய் ஆகியோரை அழைத்து சட்ட விதிமுறைப்படி சிறுமிக்கு விவரம் தெரியாத சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க கூடாது என எடுத்துரைத்தனர். இதையடுத்து, திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளும், உறவினர்களுக்கு விருந்தும் தயார் நிலையில் இருப்பதாக கூறினார். பின்னர் சட்ட விதிமுறைகள் பின்பற்றி 18 வயதுக்கு பிறகு குறிப்பிட்ட நாளில் மணமுடிப்பதாக கூறி எழுதிக் கொடுத்ததை அடுத்து அதிகாரிகள் சென்றனர்.

இந்தச் சம்பவத்தால் மணமகன் வீட்டிலும், மணமகள் வீட்டிலும் உறவினர்களுக்காக தயார் செய்யப்பட்ட விருந்து அனைத்தும் வீணானது.

 மற்றொரு சம்பவம்

இதேபோல், விருதுநகர் அருகே மாந்தோப்பு கிராமத்தைச் மாயகிருஷ்ணன் மகள் கார்த்தீஸ்வரி(15). இவரது தாய்மாமா ரமேஷ்குமார்(22) ஆகியோருக்கு திருச்சுழியில் உள்ள அரங்கத்தில் திருமணம் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து தகவறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று பெண்ணின் வீட்டாருக்கு அறிவுரை வழங்கினார்கள். பின்னர் 21 வயது நிரம்பிய பின் தான் திருமணம் நடத்த வேண்டும் எடுத்துக் கூறி பெற்றோர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டனர். மேலும், தொடர்ந்து அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என எச்சரித்து சென்றனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.