மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க மாநாடு மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில், உயர் கல்வியில் முன்னுரிமை வழங்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். மழலையர் பள்ளி முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிக்கல்வி முழுவதும் அரசு பொறுப்பில் அனைவருக்கும் தரமாக வழங்கும் ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்சி முறை, ஒரே தேர்வு முறை கொண்ட மாணவர்கள் சமத்துவத்திற்கான பொதுப்பள்ளி, அருகாமைப் பள்ளி முறையை அமல்படுத்த உரிய சட்டம் இயற்றவும் நடைமுறைப்படுத்தவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கையெடுக் வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் சமச்சீர் பாடம் அமல்படுத்தப்பட்ட பின் தனியார் பள்ளிகள் மெட்ரிக் என்ற பெயரை பயன்படுத்துவதை தமிழக அரசு தடை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டன.