அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் மூலம் கல்வித்துறையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 16, 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.அவர்களுக்கு வாரம் 3 அரை நாள் வீதம் 12 அரை நாட்கள் பணிபுரிந்தால் மாத தொகுப்பூதியம் ரூ.5,000 வழங்கப்படும் என்று அரசாணை உள்ளது. விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முழு தொகுப்பூதியமான ரூ.5,000 ஏப்ரல் மாத ஊதியமாக வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்தில் 9 நாட்கள் ஊதியத்தை மட்டுமே வழங்கி இருக்கிறார்கள். பல தலைமை ஆசிரியர்கள் 12 அரை நாட்களுக்கு மேல் முதன்மைக்கல்வி அலுவலர் வாய்மொழி உத்தரவின்பேரில் பிளஸ்-2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது மாலை நடைபெற்ற பள்ளிக்கு ஆசிரியர்கள் தேர்வு பணிக்கு சென்றதால் பகுதி நேர ஆசிரியர்களை வைத்து பாடம் நடத்தி உள்ளனர்.