இதேபோல், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார பகுதிகளில் அதலைப்பட்டி உள்ளிட்ட சில கிராமங்களில் வீட்டு மனைகளான நிலங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதனால், வறட்சி நிவராண கணக்கெடுப்பில் முறைகேடுகள் நடந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட நிலங்களை மறுபடியும் கணக்கெடுப்புச் செய்து உரிய தொகையை ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயமுருகன் தலைமையில், ஆர்.ஆர்.நகர் பகுதி செயலாளர் கோபால்சாமி முனனிலையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.