தமிழக முதல்வரின் விலையில்லா மடிக்கணினி திட்டத்தை, வாக்குறுதியாக அளித்து உத்திரபிரதேசம் மற்றும் கர்நாடகத்தில் தேர்தலில் ஆட்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதனால், ஒரு திட்டத்துக்கே வெற்றி என்றால் இந்தியா முழுவதும் இது போல் திட்டங்கள் செயல்படுத்தினால் வளமான பாரதம் உருவாகும். அதனால் விலையில்லா பொருள்கள் பெற்ற அனைத்து பயனாளிகளும் உபயோகிக்கும் போது முதல்வரை நினைத்துபார்க்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார். இதேபோல், பாப்பாகுடி, மேட்டுப்பட்டி, கொண்டாலபுதூர், பெத்துரெட்டிபட்டி, போத்திரெட்டிபட்டி மற்றும் உப்பத்தூர் ஆகிய கிராமங்களிலும் விலையில்லா பொருள்களை வழங்கினார்.