பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வில் 582 பேர் பங்கேற்பு

இந்த நேர்முகத் தேர்வு தங்கம்மாள்-பெரியசாமி நாடார் நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இம்மாவட்டத்திலிருந்து சிறப்பாசிரியர்கள் பணியிடத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:06 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தி்ல் சிறப்பாசிரியர்கள் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வில் 582 பேர்கள் வரையில் பங்கேற்றனர்.

இந்த நேர்முகத் தேர்வு தங்கம்மாள்-பெரியசாமி நாடார் நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இம்மாவட்டத்திலிருந்து சிறப்பாசிரியர்கள் பணியிடத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இசை ஆசிரியர்-11, தையல்-138, ஓவியம்-102, உடற்கல்வி-130, கணிப்பொறி-311, வாழ்க்கை கல்வி மற்றும் கட்டடப்பணி ஆசிரியர்-7 என மொத்தம் 699 பேர்கள் வரையில் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இத்தேர்வில் பங்கேற்பதற்காக குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே அனைவரும் பள்ளி வளாகத்திற்குள் வந்தனர். இதில், நேர்முகத் தேர்வு காலையில் 10-மணிக்கு தொடங்கி, தொடர்ந்து நடைபெற்றது. இதில், 699 பேர் விண்ணப்பம் செய்திருந்த நிலையில் 582 பேர்கள் வரையில் கலந்து கொண்டனர். 117 பேர் நேர்முகத்தேர்விற்கு வரவில்லை என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(பொறுப்பு) அமுதவள்ளி தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.