பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

விருதுநகர் அருகே மர்மமான முறையில் 15 தெருநாய்கள் திடீர் சாவு

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ளது கூத்தியார்குண்டு கிராமம். இப்பகுதியில் தெருநாய்கள் அதிகம் சுற்றித் திரிந்து வந்தது. இந்நிலையில் கூரைக்குண்டு காட்டுப்பகுதியிலும், சாலையோரத்திலும் 15

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:06 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே மர்மமான முறையில் 15 நாய்கள் உயிரிழந்தது குறித்து சூலக்கரை காவல் நிலைய போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ளது கூத்தியார்குண்டு கிராமம். இப்பகுதியில் தெருநாய்கள் அதிகம் சுற்றித் திரிந்து வந்தது. இந்நிலையில் கூரைக்குண்டு காட்டுப்பகுதியிலும், சாலையோரத்திலும் 15 நாய்கள் வரையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன. இது தொடர்பாக அப்பகுதியில் உள்ளவர்கள் விலங்கின ஆர்வலர்களான சுனிதா கிறிஸ்டி மற்றும் முருகன் உள்ளிட்டோரிடம் தெரிவித்தனர். அதையடுத்து, உடனே கிராமத்தில் உள்ளவர்களிடம் விசாரணை செய்தனர்.

அப்போது, நாய்கள் தொந்தரவு அதிகமாக இருப்பதால் உணவில் விஷம் வைத்து கொண்றிருக்கலாம் என தெரிய வந்தது. இது தொடர்பாக சூலக்கரை காவல் நிலையத்தில் விலங்கின ஆர்வலர் முருகன் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த நாய்களுக்கு விஷம் வைத்த மர்ம நபர்கள் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.