பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

லாரி எரிப்பு வழக்கு:தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஒருவர் கைது

திருவண்ணாமலை அருகே பெட்ரோல் குண்டு வீசி, கன்டெய்னர் லாரி எரிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:04 pm

தமிழ்ச்செல்வன்

திருவண்ணாமலை அருகே பெட்ரோல் குண்டு வீசி, கன்டெய்னர் லாரி எரிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் ஏப்ரல் 30 முதல் மே 11 வரை வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.

மே 2-ம் தேதி அதிகாலை திருவண்ணாமலை-செங்கம் சாலை, அத்தியந்தல் ஏரிக்கரையில் வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரியை மர்ம நபர்கள் வழிமறித்து பெட்ரோல் குண்டு வீசித் தாக்கினர். இதில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சக்கர் கான் (24) இறந்தார்.

இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸார் 17 பேர் மீது வழக்குப் பதிந்தனர். இவர்களில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். மூவர் போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஒருவர் மட்டும் தலைமறைவாக உள்ளார்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில்:

கைது செய்யப்பட்டவர்களில் ஏற்கெனவே மூவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இப்பொழுது 4-வதாக பெரிய கோட்டாங்கல் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் பட்டுசாமி (35) என்பவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான ஆட்சியர் விஜய் பிங்ளேவின் உத்தரவு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பட்டுசாமியிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.