பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கடலூரில் மீன்பிடிக்கச் சென்ற மாணவர் தண்ணீரில் மூழ்கி பலி

கடலூரில் மீன்பிடிக்க கட்டுமரத்தில் சென்ற ஐடிஐ மாணவர், தண்ணீரில் மூழ்கி பலியானார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:55 pm

பெ. விஜயபாஸ்கர்

கடலூரில் மீன்பிடிக்க கட்டுமரத்தில் சென்ற ஐடிஐ மாணவர், தண்ணீரில் மூழ்கி பலியானார்.

கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த உத்ராபதி மகன் ஆனந்தராமன் (18), அதேப் பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் மகன் சங்கேஸ்வரனுடன் (19) திங்களன்று துறைமுக முகத்துவாரமான பரவனாறு பகுதியில் மீன்பிடிக்க கட்டுமரத்தில் சென்றார்.

அப்போது திடிரென கட்டுமரம் கவிழ்ந்ததில் இருவரும் தண்ணீரில் விழுந்தனர். ஆனால், சங்கேஸ்வரன் நீந்தி கரையேறினார். ஆனந்தராமனை காணவில்லை. தீயணைப்புத் துறையினர் நேற்று இரவு முழுவதும் தேடினர். இதற்கிடையே இன்று காலை துறைமுகம் அருகே அவரது உடல் கரைஒதுங்கியது. ஆனந்தராமன் ஐடிஐயில் இரண்டாமாண்டு பயின்று வந்த மாணவர் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.