கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மதுபான பார் உரிமையாளர் கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு ஆயுள்

மதுபான பார் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:38 am

ஜெபலின்ஜான்

மதுபான பார் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

ஈரோடு வைராபாளையத்தில் மதுக்கடையுடன் பாரை குமார், சக்தி (எ) கந்தசாமி ஆகியோர் நடத்தி வந்தனர். இக்கடையில் தினேஷ், ராஜா ஆகியோர் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர்.

இந்த பாரில் கருங்கல்பாளையம் கக்கன்நகரை சேர்ந்த கணேசன் (எ) மலையாள கணேஷ் (33), முருகன் (27), ரமேஷ் (25), சக்தி (எ) சக்திவேல் (25), பெரியசாமி (25), சந்தைபேட்டை கமலாநகரை சேர்ந்த மாதேஷ் (எ) மாதேஷ்வரன் (25), செந்தில்நாகராஜ் (எ) குட்டி (26), ஆறுமுகம் (25), கமல் (எ) விஸ்வநாதன் (25) ஆகியோர் பாரில் 28.11.2010-ம் தேதி இருந்தார்களாம். அப்போது பெரியசாமி, காலிபாட்டிலை பாருக்குள் ஓங்கி அடித்து உடைத்தாராம். இதைக் கண்டித்ததால் முருகன், பெரியசாமி ஆகியோருக்கும் பார் உரிமையாளர் சக்தி (எ) கந்தசாமிக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இதனால், ஆத்திரம் அடைந்த முருகன், பெரியசாமி மற்றும் அவரது நண்பர்கள் அதே தினத்தில் இரவில் மீண்டும் கடைக்குச் சென்று சக்தி (எ) கந்தசாமியிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது மலையாள கணேஷ் தன் கையில் வைத்திருந்த கத்தியால் சக்தியின் வயிற்றில் குத்தினாராம். அதேபோல மாதேஷ், சக்திவேல் ஆகியோர் சோடா பாட்டிலால் சக்தியை தாக்கினார்களாம். இதில் படுகாயம் அடைந்த சக்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கருங்கல்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மலையாள கணேஷ், மாதேஷ், சக்தி (எ) கந்தசாமி, பெரியசாமி ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இறுதிகட்ட விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சர்வமங்கலா, குற்றஞ்சாட்டப்ட்ட மலையாள கணேஷ், மாதேஷ், சக்தி (எ) கந்தசாமி, பெரியசாமி ஆகியோருக்கு ஆயுள் சிறைத்தண்டனையும், தலா ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசுத் தரப்பில் கூடுதல் வழக்குரைஞர் துரை சக்திவேல் ஆஜரானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.