225 மூட்டைகள் கலப்பட டீத்தூள் பறிமுதல்
ஈரோடு அருகே மூலப்பாளையம் பாரதிநகரில் போலி டீத்தூள் ஆலை இயங்கி வருவதாகமாவட்ட வழங்கல் அலுவலர் துர்க்கா மூர்த்திக்கு புகார்கள் வந்தன.இதையடுத்து துர்க்கா மூர்த்தி தலைமையில் உணவுகடத்தல்


ஈரோடு அருகே போலி டீத்தூள் ஆலைக்கு அதிகாரிகள்செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர். 225 போலி டீத்தூள் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு அருகே மூலப்பாளையம் பாரதிநகரில் போலி டீத்தூள் ஆலை இயங்கி வருவதாகமாவட்ட வழங்கல் அலுவலர் துர்க்கா மூர்த்திக்கு புகார்கள் வந்தன.இதையடுத்து துர்க்கா மூர்த்தி தலைமையில் உணவுகடத்தல் தடுப்புப் பிரிவு வட்டாட்சியர் சிவசுப்பிரமணியம், துணை வட்டாட்சியர் செலந்தில்ராஜ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் இன்று திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த 30 கிலோ எடையுள்ள 225 மூட்டைகள்இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மூட்டைகளில் டீத்தூளுடன், போலிகலப்படத்தூளும் கலந்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மாவட்ட வழங்க அலுவலர் துர்க்கா மூர்த்தி கூறியது:
நீலகிரி மாவட்டத்தில் இருந்து டீத்தூளும், கலப்பட தூளும் இங்கு கொண்டுவரப்பட்டு இங்கிருந்து பொட்டலம் செய்யப்பட்டு தேனி, கம்பம், கரூர் போன்ற மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுபோன்ற கலப்படம் செய்வோர் மீது உணவு பாதுகாப்புச்சட்டத்தில்தான் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த ஆலையை நடத்தி வந்த
உரிமையாளர் தனசங்கரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தடயவியல் ஆய்வகத்தில் இருந்து கிடைக்கும் அறிக்கையின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...