பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கத்திமுனையில் ரூ.1.10 லட்சம் நகை, பணம் கொள்ளை முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசம்

புதுச்சத்திரம் அருகே நள்ளிரவில் பெண் மற்றும் அவரது பேரனை மிரட்டி முகமூடிக் கொள்ளையர்கள் கத்திமுனையில் ரூ.1.10 லட்சம் மதிப்புடைய நகை, பணம் கொள்ளையடித்துச் சென்றனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:07 pm

தமிழ்ச்செல்வன்

புதுச்சத்திரம் அருகே நள்ளிரவில் பெண் மற்றும் அவரது பேரனை மிரட்டி முகமூடிக் கொள்ளையர்கள் கத்திமுனையில் ரூ.1.10 லட்சம் மதிப்புடைய நகை, பணம் கொள்ளையடித்துச் சென்றனர்.

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே செல்லியாயிபாளையம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த கந்தசாமியின் மனைவி செல்வி(49) கூலித்தொழிலாளி. இவரது மகள் வழி பேரன் சந்துரு(19) திருச்சி தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு பட்டப்படிப்பு படிக்கிறார். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு சந்துரு வீட்டுக்குள்ளேயும், செல்வி வீட்டுக்கு வெளியேயும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 2 மணியளவில் முகமூடி அணிந்தபடி வந்த இரு மர்மநபர்கள், செல்வியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளே படுத்து தூங்கிய சந்துருவை கதவை திறக்கும்படி கூறினராம்.

அதன்படி, செல்வி கூறியதை கேட்டு சந்துரு கதவை திறந்ததும் இருவரையும் மர்மநபர்கள் ஒரு நாற்காலியும் அமரவைத்து கத்தி முனையில் மிரட்டியுள்ளனர். தொடர்ந்து, பீரோவை திறந்து நகை, பணத்தை எடுத்துத்தரும்படி மர்மநபர்கள் கூறியதை அடுத்து செல்வி, பீரோவை திறந்து அதிலிருந்த 3.5 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் பணம் என மொத்தம் ரூ.1.10 லட்சம் மதிப்புடைய நகை, பணத்தை முகமூடிக் கொள்ளையர்களிடம் அளித்துள்ளார். அந்த நகை, பணத்தை பெற்றுக்கொண்ட முகமூடிக் கொள்ளையர்கள் அப்போதே அங்கிருந்து தப்பியோடிவிட்டனராம்.

உடனடியாக இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து செல்வி, சந்துரு ஆகியோர் புதுச்சத்திரம் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தியதுடன் கைரேகை நிபுணர்களின் தடயவியல் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து செல்வி அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

நள்ளிரவில் நடைபெற்ற இந்த முகமூடிக் கொள்ளைச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.