அறிவியல் ரயிலை 6 ஆண்டுகளில் ஒரு கோடி பேர் பார்வையிட்டனர்: லிம்கா சாதனை விருது
அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சியை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்ததையொட்டி லிம்கா சாதனை விருது பெற்றது.


அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சியை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்ததையொட்டி லிம்கா சாதனை விருது பெற்றது.
பல்லுயிர் தன்மைகள், தட்ப வெப்ப நிலை மாறுதல்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சுற்றுச்சூழல், வனம், அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், விக்ரம் சாராபாய் அறிவியல் மையம் மற்றும் இந்திய ரயில்வே துறைகளின் கூட்டு முயற்சியில் 16 பெட்டிகளுடன் அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2007ம் ஆண்டு தனது முதல் பயணத்தை துவங்கியது.
கடந்த வாரம் வரை 94 லட்சம் பேர் பார்வையிட்ட நிலையில் கடந்த 31-ம் தேதி கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்திற்கு வந்தது.இங்கு ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் பார்வையிட்டனர். வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில், கண்காட்சியை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது.
அதனையொட்டி லிம்கா சாதனை விருது வழங்கப்பட்டது. இதற்கான விழா ஞாயிற்றுக்கிழமை கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்தில் நடந்தது.விக்ரம் சாராபாய் அறிவியல் மைய நிர்வாக இயக்குநர் திலிப் சுர்கார் தலைமை வகித்தார். கடலூர் மாவட்ட ஆட்சியர் ரா. கிர்லோஷ்குமார், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் அச்சலேந்தர் ரெட்டி, ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மஞ்சுளா ரங்கராஜன், மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அதிகாரி ஷாஷி அகுஜா வாழ்த்திப் பேசினர்.
அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவன செயலர் ராமசாமி பேசுகையில் 350 நிலையங்களை கடந்து ஒரு கோடி பார்வையாளர்கள் பார்வையிட்டதில் ரயில்வே துறையின் பங்கு மகத்தானது. அறிவியல் நுட்பத்தை மக்கள் உணர வேண்டும் என்பதற்காக இத்திட்டம். ரயில் வழியாக துவங்கப்பட்ட அறிவியல் விழிப்புணர்வு கண்காட்சியை ஒரு கோடி பேர் பார்வையிட்டு லிம்கா சாதனை புரிந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...