நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த டெக்கான் அணியை, ரூ.100 கோடிக்கான வங்கி உத்தரவாதம் அளிக்கத் தவறியதையடுத்து ஐபிஎல் போட்டியிலிருந்து நீக்கியது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ).
இதனிடையே, மும்பையைச் சேர்ந்த கம்லா லேண்ட்மார்க் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு டெக்கான் அணியை விற்று விட்டதாக டெக்கான் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஆனால், எவ்வளவு ரூபாய்க்கு விற்கப்பட்டது என்று தெரியவில்லை.
2008ஆம் ஆண்டு டெக்கான் அணியை டெக்கான் கிரானிக்கிள் ஹோல்டிங்ஸ் லிமிடெட் அணி சுமார் ரூ.450 கோடிக்கு வாங்கியது. சமீபத்தில், கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்து டெக்கான் அணியை ஐபிஎல் போட்டியிலிருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிரடியாக நீக்கியது. இதனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தை டெக்கான் நாடியது.
வீரர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை; ரூ.900 கோடிக்கு அணியை வேறு நிறுவனம் ஏலம் எடுக்க முன்வந்தபோதும் அதனை டெக்கான் நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று பிசிசிஐ தரப்பில் டெக்கான் அணி நீக்கத்துக்கு காரணம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ரூ. 100 கோடி மதிப்பிலான வங்கி உத்தரவாதம் பிசிசிஐ-க்கு அளிக்க வேண்டுமென டெக்கான் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அக்டோபர் 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உத்தரவாதத் தொகையை அளிக்கவில்லையென்றால் டெக்கான் அணி மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது.
ஆனால், டெக்கான் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வெள்ளிக்கிழமை வங்கி உத்தரவாதம் அளிக்கவில்லை. இதனால், டெக்கான் சார்ஜர்ஸ் அணி உரிமத்தை பிசிசிஐ நீக்கி விட்டது.
இச்சூழ்நிலையில், கம்லா நிறுவனத்துக்கு டெக்கான் அணி விற்கப்பட்டுள்ளது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் அவ்வணி வீரர்களுக்கு தவணையாக உள்ள சம்பளத்தை யார் அளிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திலக் வர்மாவிடம் பேசியது என்ன? ஹார்திக் பாண்டியா விளக்கம்!
சட்டப்பேரவைத் தேர்தல்! புதுவை மதுக்கடைகளில் அலைமோதிய மது பிரியர்கள்!

கோடை விடுமுறைக்கு லண்டன் சென்ற நடிகை மதுமிதா!

போஸ் வெங்கட் நடிக்கும் புதிய இணையத் தொடர்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


