மதுரையில் நித்தியானந்தரை கட்டித் தழுவி வரவேற்றார் ஆதினம்
மதுரை ஆதினம் மிகவும் மனவருத்தத்தில் இருந்ததாகத் தெரிகிறது. அதனால் அவர் கடந்த 2 நாட்களாக உணவு உண்ணாமல்...


மதுரை, ஜூன் 16: பெங்களூருவில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு மதுரைக்கு வந்த மதுரை இளைய ஆதினம் நித்தியானந்தரை கட்டித் தழுவி கண்ணீர் மல்க வரவேற்றார் மதுரை ஆதினம்.
இன்று காலை 5 மணி அளவில் பிடதி ஆசிரம சீடர்கள் சிலருடன் நித்தியானந்தர் பெங்களூருவில் இருந்து மதுரை வந்தடைந்தார். பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ள மாட்டோம் என்ற உறுதிமொழியின் பேரில் நேற்று ராமநகரம் நீதிமன்றம் நித்தியானந்தருக்கு ஜாமீன் வழங்கியது. இதை அடுத்து அவர் பெங்களூருவில் இருந்து மதுரைக்குத் திரும்பினார்.
நித்தியானந்தரின் வழக்கு, சிறைவாசம் உள்ளிட்ட விவகாரங்களால் மதுரை ஆதினம் மிகவும் மனவருத்தத்தில் இருந்ததாகத் தெரிகிறது. அதனால் அவர் கடந்த 2 நாட்களாக உணவு உண்ணாமல் இருந்துள்ளார். இன்று காலை நித்தியானந்தர் மதுரை வந்தடைந்தவுடன் ஆதினம் நேரில் சென்று அவரைக் கட்டித் தழுவி வரவேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...