ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இது தெரியுமா? கடலின் ஆழத்துக்குச் செல்லச் செல்ல அழுத்தம் அதிகமாக இருப்பது ஏன்?

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...

sea

கடல் - கோப்புப்படம்

Published On :21 மே 2026, 7:34 pm IST

கடலின் ஆழத்துக்குச் செல்லச் செல்ல அழுத்தம் அதிகமாக இருப்பது ஏன்?

எடுத்துக்காட்டாக, உங்கள் தலையில் ஒரு சிறிய கல்லைத் தூக்கி வைத்தால் என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது. அடுத்ததாக மேலும் 10 கற்களைத் தூக்கி வைக்கிறோம். என்ன ஆகும்?

கொஞ்சம் வலிக்கும். மேலும் 100 கற்களைத் தூக்கி வைக்கிறோம். என்ன ஆகும்? அதனால் ஏற்படும் அழுத்தத்தை நம்மால் தாங்க முடியாதுதானே?

இதற்குக் காரணம் என்ன? மேலே கற்களைத் தொடர்ந்து அடுக்க அடுக்க அதன் எடை புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்றவாறு கீழ் நோக்கி அழுத்தும்.

இப்படித் தொடர்ந்து மேலுள்ள பொருளின் எடையானது, அழுத்தமாக அடிப்பரப்புக்குக் கடத்தப்படுகிறது.

கற்களைப் போலவே நீருக்கும் குறிப்பிட்ட அளவு எடை இருக்குமல்லவா? கடலின் ஆழத்துக்குள் செல்லச் செல்ல, மேலே உள்ள நீர்ப்பரப்பின் எடை அதிகமாகிக் கொண்டே செல்லும். இந்த எடை அதிகரிப்பு மூலம் அடிப்பரப்புக்கு அழுத்தம் கடத்தப்படுவதால்தான் கடலின் ஆழத்தில் அழுத்தம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

Summary

About rare information that children should know

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.