ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இது தெரியுமா? பூமி சுற்றுவதை நம்மால் உணர முடிவதில்லையே, ஏன்?

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...

THE NEW INDIAN EXPRESS

கோப்புப்படம்

Published On :25 பிப்ரவரி 2026, 6:19 pm IST

பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை!

நாம் இந்தப் பூமியில்தான் இருக்கிறோம். ஆனாலும், பூமி சுற்றுவதை நம்மால் உணர முடிவதில்லையே, இதற்குக் காரணம் என்ன?

பூமத்திய ரேகையில் பூமியின் சுற்றளவு என்பது 40,075 கி.மீ. ஆகும். இந்த ரேகையில் ஒரு புள்ளி முழுவதும் சுழன்று திரும்ப 24 மணி நேரம் எடுக்கிறது. இதை நாம் ஒரு நாள் என்கிறோம்.

பூமி எவ்வளவு வேகத்தில் சுற்றுகிறது தெரியுமா? ஒரு நொடிக்கு 460 மீட்டர் வேகத்தில் பூமி சுழல்கிறது. அதாவது ஒரு மணி நேரத்துக்கு சுமார் 1,000 மைல் அல்லது 1610 கிமீ வேகத்தில் சுழலும்.

பூமியைப் போன்ற பெரிய உருண்டை சுற்றுவதை அதன் மேலேயே இருக்கும் நாம் உணர்வதில்லை. இதற்குக் காரணம் இந்த வேகம்தான்.

ஆனால், மிகவும் முக்கியமான காரணம், பூமியின் புவி ஈர்ப்பு விசையால் பூமி சுழலும்போது நாமும் தரையுடன் சேர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கிறோம். பூமிக்கு மேலாக மிதந்தாலும் புவிஈர்ப்பு விசையால் அதனுடன் சேர்ந்து நாமும் சுழன்று கொண்டுதான் இருப்போம். அதனால் ஒருபோதும் நம்மால் பூமி சுழல்வதை உணர முடியாது.

Summary

Why can't we feel the Earth rotating?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.