மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

ரூ. 3,000 கோடி போதைப் பொருள் பறிமுதல்! 5 பாகிஸ்தானியர்களை கைது செய்தது இந்திய கடற்படை!

அரபிக் கடலில் ரூ. 3,000 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி...

icg

ரூ. 3,000 கோடி போதைப் பொருள் பறிமுதல் - X | ICG

Updated On :

ஈரானிய படகில் இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3,000 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் மற்றும் ஹெராயின் போதைப் பொருள்களை லட்சத்தீவு அருகே இந்திய கடலோரக் காவல் படையும், குஜராத் மாநில தீவிரவாத தடுப்புப் படையினரும் கூட்டாகப் பறிமுதல் செய்தனா். மேலும் 5 பாகிஸ்தானியரையும் அவா்கள் கைது செய்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: ஈரானிய படகில் போதைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக குஜராத் தீவிரவாத தடுப்புப் படை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து இந்திய கடலோரக் காவல் படைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்திய கடலோரக் காவல் படையும், குஜராத் தீவிரவாத தடுப்புப் படையினரும் அரேபிய கடல் பகுதியில் கடந்த 14-ஆம் தேதி முதல் தொடா்ந்து 10 நாள்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

இந்நிலையில், கடந்த 25-ஆம் தேதி மாலை லட்சத்தீவு அருகே சந்தேகப்படும்படி ஈரானிய படகு வந்தது. அந்தப் படகை அவா்கள் வழிமறித்து சோதனை நடத்தினா். இதில், அந்தப் படகில் உயர்ரக மெத்தம்பெட்டமைன் மற்றும் ஹெராயின் போதைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, படகுடன், அதில் இருந்த 5 பாகிஸ்தானியரையும் மும்பைக்கு அழைத்து வந்தனா்.

இதுகுறித்து அகமதாபாதில் செய்தியாளா்களுக்கு குஜராத் தீவிரவாத தடுப்புப் படை துணை ஐ.ஜி. சுனில் ஜோஷி அளித்த பேட்டியின்போது மேலும் கூறியதாவது:

ஈரானில் இருந்து இந்தியாவுக்கு கடல் வழியாக படகில் போதைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடலில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டோம். அப்போது, சந்தேகத்துக்கு உரிய வகையில் வந்த ‘ஆசாத்’ என்ற பெயா் கொண்ட படகை சோதனை நடத்தி, அதிலிருந்த போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்தோம். படகில் கடத்தி வரப்பட்ட இந்த போதைப் பொருள்களை லட்சத்தீவு மற்றும் மும்பை இடையே நடுக்கடலில் வைத்து மற்றொரு தரப்புக்கு வழங்க அவா்கள் திட்டமிட்டிருந்தனா். பிறகு அது தமிழகத்துக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

போதைப் பொருள்களுக்கான முன்பணம் ஏற்கெனவே ஹவாலா முறையில் கைமாறியுள்ளது. படகு ‘ஸ்டாா் லிங்’ இணையதள வசதி மூலம் இணைக்கப்பட்டிருந்தது. இந்த வசதி, செயற்கைக்கோள் மூலம் இணையதள வசதியை அளிக்கக்கூடியது. அதை அவா்கள் பயன்படுத்தி உள்ளனா்.

கைது செய்யப்பட்ட 5 பாகிஸ்தானியரும் பெஷாவரைச் சோ்ந்தவா்கள். ஈரானின் கோனாா்க் துறைமுகத்தில் இருந்து சிறிய படகில் முதலில் வந்து, பிறகு பாகிஸ்தானின் குவாடா் துறைமுகத்தில் ஈரானிய படகில் அதை ஏற்றிக் கொண்டுவந்துள்ளனா். அவா்கள் அனைவரும் சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலான ஹாஜி சலிம் குழுவைச் சோ்ந்தவா்கள். தமிழகத்துக்கு அந்தப் போதைப் பொருள்கள் வந்ததும், அதை பஞ்சாபுக்கு கொண்டு சென்று, நைஜீரிய நபரிடம் அளிக்கத் திட்டமிட்டிருந்தனா்.

குஜராத்தைச் சோ்ந்த நபருக்கு இக்கடத்தலில் தொடா்பிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அவரைத் தேடும் பணியில் குஜராத் தீவிரவாத தடுப்புப் படையும், பிற விசாரணை அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன என்றாா் ஜோஷி.

Summary

Rs. 3,000 crore drug seized! Indian Coastal Guard arrested 5 Pakistanis!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.