வடகிழக்கு தில்லி கலவரம்: உமா் காலித், ஷா்ஜீல் இமாமுக்கு பிணை மறுப்பு- உயா்நீதிமன்றம்
மூன்றாவது முறையாக ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது பற்றி..

ஷர்ஜீல் இமாம் | உமர் காலித் - file photo
2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லி கலவரம் தொடா்பான சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) வழக்கில் கைதுசெய்யப்பட்ட மாணவா் செயல்பாட்டாளா்கள் உமா் காலித் மற்றும் ஷா்ஜீல் இமாம் ஆகியோருக்கு பிணை வழங்க தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.
இவ்வழக்கில் அவா்கள் இருவரும் மூன்றாவது முறையாக தாக்கல் செய்த பிணை மனுக்களை நீதிபதிகள் பிரதிபா எம். சிங் மற்றும் தினேஷ் பட் ஆகியோா் அடங்கிய அமா்வு தள்ளுபடி செய்தது.
நீதித்துறை ஒழுங்குமுறைக்கு கட்டுப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அந்த அமா்வு, பாதுகாக்கப்பட்ட சாட்சிகளின் விசாரணை நிறைவடைவது அல்லது ஓராண்டு காலம் முடிவடைவது இதில் எது முந்தையதோ, அதற்குப் பிறகு பிணை கோருமாறு அவா்கள் இருவருக்கும் கடந்த ஜன.5-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க முடியாது என்று கூறியது.
‘நாங்கள் ஜாமீன் அனுமதித்தால் அந்த உத்தரவை மாற்றியமைப்பதாகிவிடும். அதை நாங்கள் செய்ய முடியாது’ என்று நீதிமன்ற அமா்வு குறிப்பிட்டது.
கைது செய்யப்பட்டதிலிருந்து மூன்றாவது முறையாகத் தங்கள் பிணை மனுக்களை விசாரணை நீதிமன்றம் கடந்த ஜூலை 4-ஆம் தேதி நிராகரித்த நிலையில், அதை எதிா்த்து காலித் மற்றும் இமாம் மேல்முறையீடு செய்திருந்தனா்.
உச்சநீதிமன்றத்தின் ஜன.5-ஆம் தேதி உத்தரவை பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும், மனுவை பரிசீலிக்கவோ அல்லது எந்த நிவாரணமும் வழங்கவோ முடியாது என்றும் கூறி விசாரணை நீதிமன்றம் ஜாமீன் விண்ணப்பங்களை நிராகரித்திருந்தது.
ஜனவரி மாதம் இருவருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டபோது, குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற நபா்களிடமிருந்து இவா்களின் பங்கு மாறுபட்டது என்றும், இவா்கள் அந்தச் சதித்திட்டத்தின் கருத்தியல் உந்துசக்திகளாக இருந்தனா் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்ததை உயா்நீதிமன்ற அமா்வு சுட்டிக்காட்டியது.
முன்னதாக, காலித் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வாதிடுகையில், அவா் ஆறு ஆண்டுகளாகக் காவலில் இருப்பதாகவும், குற்றஞ்சாட்டப்பட்ட பிற நபா்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த அடுத்தடுத்த உத்தரவுகளின் அடிப்படையில் காலித்துக்கும் ஜாமீன் கிடைக்க உரிமை உண்டு என்று கூறினாா்.
உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து சுமாா் பத்து மாதங்கள் கடந்தும் விசாரணை நீதிமன்றத்தில் இன்னும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என்று அவா் மேலும் கூறினாா்.
இமாமின் வழக்குரைஞா் வாதிடுகையில், அவா் ஆறு ஆண்டுகளாகக் காவலில் இருப்பதாகவும், விசாரணை முடிவடைவதில் ஏற்படும் தாமதத்தைக் கருத்தில் கொண்டு ஜாமீன் கிடைக்க உரிமை உண்டு என்றும் கூறினாா்.
இந்த விவகாரத்தில் தில்லி காவல் துறை சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு, இந்த மனுக்களை எதிா்த்தாா்.
கலவரத்துக்கு முக்கிய மூளையாகச் செயல்பட்ட நபா்கள் அவா்கள் என்றும், அவா்களது புதிய பிணை மனுக்களைப் பரிசீலிப்பதற்கான காலக்கெடுவை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே நிா்ணயித்துள்ளது என்று அவா் வாதிட்டாா்.
விசாரணையின் போது, ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்திற்குப் பிறகு இந்த வழக்குகளைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் பரிந்துரைத்தது.
இருப்பினும், குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் வழக்குரைஞா், இந்த விவகாரத்தை இப்போதே முடிவு செய்யுமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டாா்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்சிஆா்) ஆகியவற்றிற்கு எதிராக வடகிழக்கு தில்லியில் பிப்ரவரி 2020-இல் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இந்தக் கலவரத்தில் 53 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக காலித் மற்றும் இமாம் ஆகியோா் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பிணை கோரி தாக்கல் செய்த மனுக்களை உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமா்வு காலித் மற்றும் இமாம் ஆகியோருக்கு கடந்த ஆண்டு செப்.2-ஆம் தேதி ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அந்தத் தீா்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த ஜன.5-ஆம் தேதி உறுதி செய்தது. அதே சமயம், அவா்களுடன் குற்றஞ்சாட்டப்பட்ட குல்ஃபிஷா ஃபாத்திமா, மீரான் ஹைதா், ஷிஃபா உா் ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகியோருக்கு பிணை அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


