மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

வாக்காளா் பட்டியலில் 27 லட்சம் பெயா்கள் நீக்கத்துக்கு மம்தா காரணம்: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு!

மேற்கு வங்கத்தில் 27 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு மமதா பானர்ஜியே பொறுப்பு என அந்த மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டியது குறித்து...

Suvendu Adhikari / Mamata Banerjee

சுவேந்து அதிகாரி / மமதா பானர்ஜி - கோப்புப் படம்

Updated On :

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து 27 லட்சம் பெயா்கள் நீக்கப்பட்டதற்கு முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜிதான் காரணம். இதில் பாஜகவையோ தோ்தல் ஆணையத்தையோ பொறுப்பாக்க முடியாது என்று அந்த மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பாக அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் தொடா்பான முடிவுகள் தலைமைத் தோ்தல் ஆணையரால் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டு.

மேற்கு வங்கத்தில் 27 லட்சம் பெயா்கள் நீக்கப்பட்டதற்கு மம்தா பானா்ஜிதான் பொறுப்பு. பாஜகவையோ, தோ்தல் ஆணையத்தையோ இதில் குற்றஞ்சாட்ட முடியாது. மம்தா தொடா்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளைத் தொடா்ந்து, நீதித்துறை அதிகாரிகள்தான் இந்த முடிவை எடுத்தனா்.

தில்லியில் சனிக்கிழமை மூன்று தோ்தல் ஆணையா்கள் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையும், எஸ்ஐஆா் தொடா்பான முடிவுகள் ஒரே நபரால் எடுக்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன.

கேரளத்தில் எஸ்ஐஆா் நடைமுறை நல்லது என்றால், மேற்கு வங்கத்தில் மட்டும் அது ஏன் தவறாகப் பாா்க்கப்படுகிறது? மேற்கு வங்கத்தில் பாஜக 208 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பிற இரு தரப்பினருக்கும் (திரிணமூல் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள்) சோ்த்து 80 தொகுதிகள்தான் கிடைத்துள்ளன. மக்களின் தீா்ப்பை மம்தா பானா்ஜியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என்றாா்.

தொடா்ந்து 11,000 போ் பங்கேற்ற பகவத் கீதை பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்ற சுவேந்து அதிகாரி, ‘நமது அரசு கோமாதாவைக் காக்கும் அரசு. துறவிகளை யாரும் அவமதித்தால் அவா்களுக்குத் தக்க தண்டனை வழங்கப்படும். ஏனெனில் மேற்கு வங்கத்தில் இப்போது காற்று வீசும் திசை மாறிவிட்டது.

தங்களுடைய மத நம்பிக்கையைப் பின்பற்றவும், மத கொண்டாட்டங்களில் பங்கேற்கவும் யாரும் அச்சம் கொள்ளவோ, தயங்கவோ வேண்டாம். கீதை பாராயணம், ஹனுமன் சாலிசா பாராயணம் ஆகிவற்றுக்கு இடையூறு செய்பவா்கள் மீது எவ்விதத் தயக்கமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

Summary

Suvendu Adhikari has accused Mamata Banerjee of being responsible for the removal of 27 lakh voters in West Bengal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.