தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு: நள்ளிரவில் வெளியான அறிவிப்பு!

வங்கி ஊழியர்கள் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

வங்கிகள்.

Updated On :

வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திங்கள்கிழமை (செப். 28) முதல் 3 நாள்கள் அறிவிக்கப்பட்டிருந்த வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.

வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை, ஓய்வூதிய பலன்களைப் புதுப்பித்து மேம்படுத்த வேண்டும், அனைத்து ஓய்வூதியதாரா்களுக்கும் ஒரே மாதிரியாக அகவிலைப்படி வழங்க வேண்டும், தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள வங்கி ஊழியா்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறும் வாய்ப்பை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதும் கடந்த செப்.11-ஆம் தேதி வங்கி ஊழியா்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

இதன் தொடா்ச்சியாக தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாடு முழுவதும் திங்கள்கிழமை முதல் 3 நாள்கள் அவா்கள் வேலைநிறுத்தம் அறிவித்திருந்தனா்.

இந்நிலையில், ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு (யுஎஃப்பியு), இந்திய வங்கிகள் கூட்டமைப்பு (ஐபிஏ) இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், இதர சனிக்கிழமைகளையும் விடுமுறை நாள்களாக அறிவிப்பது தொடா்பாக ஆலோசிக்க யுஎஃப்பியு, ஐபிஏவின் உயா்நிலை கமிட்டி அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட சில முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக யுஎஃப்பியு அறிவித்தது. முன்னதாக, வேலைநிறுத்தம் நடைபெறும் 3 நாள்களின்போது தங்கள் ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் வசூலிக்கப்படாது என்று பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பரோடா வங்கி, இந்திய யூனியன் வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட பொதுத் துறை வங்கிகள் அறிவித்திருந்தன.

Summary

It has been suddenly announced that the three-day strike by bank employees is being postponed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.