இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: இரு நாடுகளுக்கான உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்!

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கான உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்தது குறித்து...

modi - trumph

பிரதமர் மோடி - டிரம்ப் - படம்: ஏஎன்ஐ

Updated On :

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கான உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியா, அமெரிக்கா இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடுவது குறித்து இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டமாக இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி தெரிவித்ததாவது:

இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான பணிகளில் ஏறக்குறைய 90 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்துவிட்டன. இறுதிக்கட்டப் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, அதுகுறித்து விரைவில் அறிவிப்பு வரும்.

இந்த ஒப்பந்தமானது இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும்.

இது முன்னெப்போதும் இல்லாத ஒன்று. இந்தியத் தரப்பிலும் அமெரிக்கத் தரப்பிலும் அனைத்தும் தயாராக உள்ளன. ஆனால், நிர்வாக ரீதியில் கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் சந்தித்து வரும் சில சவால்களின் காரணமாக இந்த ஒப்பந்தம் தாமதமாகிறது என்று தெரிவித்தார்.

முன்னதாக, இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் மிக வேகமாகச் செல்கிறது எனவும் இந்த வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நிறைவு பெறும் எனவும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

A senior US State Department official stated that the trade agreement between India and the US would take the relationship between the two countries to the next level.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.