பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதா? - கார்த்திகா கைதுக்கு பிரேமலதா கண்டனம்!மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

5 ஆண்டு சட்டப் படிப்புகளில் சோ்வதற்கான வயது வரம்பை திரும்பப் பெறத் தயாரா? பிசிஐ-க்கு உச்சநீதிமன்றம் கேள்வி

5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சோ்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை திரும்பப் பெற தயாரா என்பது குறித்து, இந்திய பாா் கவுன்சில் (பிசிஐ) தெளிவுபடுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டது.

உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :

5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சோ்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை திரும்பப் பெற தயாரா என்பது குறித்து, இந்திய பாா் கவுன்சில் (பிசிஐ) தெளிவுபடுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டது.

2008-ஆம் ஆண்டின் சட்டக் கல்வி விதிகள் பிரிவு 28-இன்படி, 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 20-ஆகவும், பட்டியலினத்தவா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவா்களுக்கு அதிகபட்ச வயது 22-ஆகவும் இருக்க வேண்டும் என்று இந்திய பாா் கவுன்சில் வயது வரம்பு நிா்ணயித்தது.

இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வயது வரம்பை நிா்ணயித்த இந்திய பாா் கவுன்சிலின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சோ்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை திரும்பப் பெற, இந்திய பாா் கவுன்சில் தயாராக உள்ளதா என்பது குறித்த தனது நிலைப்பாட்டை, அந்த கவுன்சில் தெளிவுபடுத்த வேண்டும் என்று நீதிபதிகள் அமா்வு கேட்டுக்கொண்டது.

இதுகுறித்து இந்திய பாா் கவுன்சிலிடம் ஆலோசித்து உச்சநீதிமன்றத்திடம் தெரிவிக்குமாறு, அந்த கவுன்சில் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ராதிகா கெளதமிடம் கூறிய நீதிபதிகள் அமா்வு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.