கர்நாடகத்தில் காங்கிரஸுக்கு அதிர்ச்சி! சட்டமேலவை தேர்தலில் 4 தொகுதிகளிலும் தோல்வி!!
கர்நாடகத்தில் நடந்த சட்ட மேலவை தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாமல் ஆளும் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளதைப் பற்றி...
கே.சி. வேணுகோபால், மல்லிகார்ஜுன கார்கே, டி.கே. சிவகுமார், ராகுல், சித்தராமையா.
கர்நாடகத்தில் நடந்த 4 சட்ட மேலவை இடங்களுக்கான தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாமல் ஆளும் கட்சியான காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 6 மாநிலங்களில் மட்டுமே சட்ட மேலவை உள்ளது. உத்தரப் பிரதேசம், பிகார், கர்நாடகம், மகாராஷ்டிரம், தெலங்கானா, ஆந்திரத்தில் சட்டமேலவை நடைமுறையில் இருக்கிறது. நிரந்தர அவையான சட்டமேலவையை முழுமையாகக் கலைக்க முடியாது. இதில் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆண்டுகள். ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், மூன்றில் ஒரு பங்கு (1/3) உறுப்பினர்கள் ஓய்வு பெறுவார்கள். அதன்பின்னர் தேர்தல் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த நிலையில், 75 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்ட மேலவையில் 38 காங்கிரஸ் உறுப்பினர்களும், 24 பாஜக உறுப்பினர்களும், ஆறு மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்களும், ஒரு சுயேச்சை உறுப்பினரும், சட்டமேலவைத் தலைவரும் உள்ளனர். அதில், அரசு நியமனங்களுக்காக ஒதுக்கப்பட்ட ஐந்து இடங்கள் காலியாக உள்ளன.
இதற்காக கர்நாடகத்தில் உள்ள பெங்களூரு ஆசிரியர் (டீச்சர்ஸ்), மேற்கு பட்டதாரிகள் (கிராஜூவேட்ஸ்), தென்கிழக்கு பட்டதாரிகள் மற்றும் வடகிழக்கு ஆசிரியர் ஆகிய தொகுதிகளில் சட்ட மேலவைக்கான தேர்தல் கடந்த அக். 23 ஆம் தேதி நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரம் இல்லாமல், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி தனித்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக மூன்று இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளமும் (ஜேடி(எஸ்)) போட்டியிட்டன. இந்தத் தேர்தலுக்கான வாக்குகள் நேற்று (அக். 27) எண்ணப்பட்டன.
வடகிழக்கு ஆசிரியர் தொகுதி, தென்கிழக்கு பட்டதாரிகள் மற்றும் மேற்கு பட்டதாரிகள் தொகுதிகளில் பாஜக அமோக வெற்றியைப் பதிவு செய்தது. அதன் கூட்டணிக் கட்சியான ஜேடி(எஸ்) பெங்களூரு ஆசிரியர் தொகுதியைக் கைப்பற்றியது.
வடகிழக்கு ஆசிரியர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட பாஜக சட்ட மேலவை உறுப்பினர் சஷில் ஜி நமோஷி, காங்கிரஸ் வேட்பாளர் சரணப்பா மத்துரை வீழ்த்தினார். காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரான மல்லிகார்ஜுன் கார்கேவின் சொந்தத் தொகுதியான கலபுரகியை உள்ளடக்கிய இந்தத் தொகுதியில் நமோஷியின் ஐந்தாவது வெற்றியாக அமைந்தது.
தென்கிழக்கு பட்டதாரிகள் தொகுதியில் பாஜகவின் கேஎம் சுரேஷ், காங்கிரஸ்ஹின் ஷாஹி ஹுலிகுண்டே முட்-ஐயும், மேற்கு பட்டதாரிகள் தொகுதியில் பாஜகவின் எஸ்வி சங்கனூர், காங்கிரஸின் மோகன் லிம்பிக்கையும் வீழ்த்தினர். பெங்களூரு ஆசிரியர் தொகுதியில் போட்டியிட்ட ஜேடியு வேட்பாளர் ஏ.பி. ரங்கநாத், காங்கிரஸின் புட்டண்ணாவை வீழ்த்தினார்.
கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் தலைமைப் பிரச்சினைகள், ரகசிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பிரச்சினைகளால் பெரும் பின்னடவைச் சந்தித்திருக்கும் நிலையில், தேர்தல் தோல்வியும் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையிலான காங்கிரஸ்,கட்சியை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
Summary
The elections to the legislative council seats held on October 23 was seen as a test of coordination between the alliance partners BJP and Janata Dal (Secular) in Karnataka
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

