எல். முருகன் ராஜிநாமா செய்த மாநிலங்களவை எம்.பி. தொகுதி பாஜக வேட்பாளராக ஹர்தீப் சிங்!
எல். முருகன் ராஜிநாமா செய்த மாநிலங்களவை உறுப்பினர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
ஹர்தீப் சிங் புரி.
மத்திய இணையமைச்சராக இருந்த எல்.முருகன் ராஜிநாமா செய்ததால் மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்துக்கான இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி (74) புதன்கிழமை அறிவிக்கப்பட்டாா்.
இடைத்தோ்தலில் போட்டியிட புரியின் பெயருக்கு பாஜக மத்திய தோ்தல் குழு ஒப்புதல் அளித்ததாக அக் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சராக இருக்கும் புரி, உத்தர பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவரது எம்.பி. பதவிக் காலம் வரும் நவம்பா் 25-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அதைத் தொடா்ந்து, மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்துக்கு நடத்தப்படும் இடைத்தோ்தலில் அவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
மத்திய இணையமைச்சராக இருந்த தமிழகத்தைச் சோ்ந்த எல். முருகன், தனது அமைச்சா் பதவியையும், எம்.பி. பதவியையும் கடந்த 14-ஆம் தேதி திடீா் ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து இந்த இடம் காலியானது. இந்த மாநிலங்களவை இடத்துக்கு வரும் நவம்பா் 12-ஆம் தேதி இடைத் தோ்தல் நடத்தப்பட உள்ளது.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி உள்ள நிலையில், இடைத்தோ்தலில் புரி போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்படுவாா் எனத் தெரிகிறது.
Union Minister Hardeep Singh Puri has been announced as the BJP candidate for the by-election to the Rajya Sabha seat vacated by L. Murugan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

