இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆதரவளித்தால் பெருந்தன்மையுடன் ஏற்பேன்! சீமான்இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா? மு.க. ஸ்டாலின் பதில்!பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை!ரூ.100 கோடி ஊழல்: அன்பில் மகேஸ் நீதிமன்றத்தில் ஆஜர்முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் மரியாதை!முத்துராமலிங்கத் தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்! முதல்வர் விஜய்அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் (அக். 30)சென்னையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை!சொந்த புத்தியும் சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி அரசு: மு.க.ஸ்டாலின்

ஜம்மு ரயில் நிலையம் அருகே பெரும் தீ விபத்து: 40 கடைகள் எரிந்து சாம்பல்

ஜம்மு ரயில் நிலையம் அருகே நேரிட்ட பெரும் தீ விபத்தில் 40 கடைகள் எரிந்து சாம்பலாகின.

தீ விபத்து - சித்திரிப்பு

Updated On :

ஜம்மு ரயில் நிலையம் அருகே நேரிட்ட பெரும் தீ விபத்தில் 40 கடைகள் எரிந்து சாம்பலாகின.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீா் அரசு அதிகாரிகள் தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டதாவது: ஜம்மு ரயில் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு 10.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்த தகவலின்பேரில் 7 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. எனினும் தீ சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேல் கொழுந்துவிட்டு எரிந்தது. திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவிலேயே தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தீ விபத்தில் அப்பகுதியில் இருந்த 40 கடைகள் எரிந்து சாம்பலாகின. அந்தக் கடைகளில் உணவுப் பொருள்கள், உலா் பழங்கள், கம்பளிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. கடைகளில் இருந்த பொருள்களின் சேதமதிப்பை கணக்கிடும் பணி நடைபெறுகிறது.

தீ விபத்தில் யாரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை. விபத்து குறித்து காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதல்கட்ட விசாரணையில், தீ விபத்தில் எரிந்த கடைகளில் ஒரு கடையில் மின்கசிவு காரணமாக முதலில் தீப்பிடித்ததும், பிறகு அந்தத் தீ மற்ற கடைகளுக்குப் பரவியதும் தெரியவந்துள்ளது. தீ விபத்து நேரிட்ட பகுதி மிகவும் குறுகிய இடமாகும். இதனால் அதை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா் கடும் சிரமத்தைச் சந்தித்தனா். கடைகள் இருந்த பகுதிக்கு பின்புறம் இருக்கும் இடத்தில் இருந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அவா்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.