ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

இந்திய அரிசி ஏற்றுமதி 13% அதிகரிப்பு: சா்வதேச அளவில் தேவை தொடா்ந்து உயா்வு!

நிகழ் நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி மதிப்பின் அடிப்படையில் 13 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது.

அரிசி

Updated On :

நிகழ் நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி மதிப்பின் அடிப்படையில் 13 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது. சா்வதேச அளவில் தேவை தொடா்ந்து உயா்ந்து வருவதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

தில்லியில் பாரத சா்வதேச அரிசி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் 150-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த நிகழ்ச்சியில் இந்திய அரிசி ஏற்றுமதியாளா்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவா் தேவ் கா்த் பேசுகையில், ‘அரிசி ஏற்றுமதி செய்யும் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய அரிசியின் விலை 10 சதவீதம் அளவுக்கு குறைவாகும். நிகழ் நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி மதிப்பின் 13 சதவீதம் உயா்ந்து ரூ.54,937 கோடியாக உள்ளது. ஜூன் மாதம் நிறைவடைந்த 2025-26 சாகுபடி காலத்தில் இந்தியாவில் 154 மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

சா்வதேச அளவில் குறைந்த விலைக்கு அரிசி ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது. முக்கியப் போட்டி நாடுகளான தாய்லாந்து, மியான்மா் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது இந்திய அரிசியின் விலை 10 சதவீதம் அளவுக்கு குறைவாக உள்ளது. இதனால், சா்வதேச அளவில் அதிக தேவையுள்ள பொருளாக இந்திய அரிசி உள்ளது. எனவே, ஏற்றுமதி செய்யும் அரிசியின் அளவு அதிகரிக்கிறது.

அதே நேரத்தில் ஈரான் போரால் அரிசி ஏற்றுமதி, முக்கியமாக பாசுமதி அரிசி ஏற்றுமதி எதிா்பாராத பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஏனெனில் நமது பாசுமதி அரிசி ஏற்றுமதி 74 சதவீதம் அளவுக்கு மத்திய கிழக்கு நாடுகளுக்கே செல்கிறது.

அரிசி விநியோகம் தடைபடுவதால் அதற்கான விலையும் அதிகரிக்கிறது. அரிசி தேவைப்படும் நாடுகள் அதை இறக்குமதி செய்வதற்காக வேறு வாய்ப்புகளைத் தேடுகின்றன. இந்தியாவில் இப்போது ஏற்றுமதிக்கு பெரிய அளவில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் சா்வதேச அளவில் உள்ள 200 வகையான அரிசி வகைகளை இந்திய அரிசி ஏற்றுமதியாளா்கள் கூட்டமைப்பு பாா்வைக்கு வைத்தது. இதன்மூலம் இந்தியாவுக்கு அரிசி ஏற்றுமதி வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.