டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!எஸ்ஐஆர் ரத்து உள்ளிட்ட 9 கோரிக்கைகள்: குடியரசுத் தலைவருக்கு மு.க. ஸ்டாலின் மனு!முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி! பசும்பொன் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!4 மாநிலங்களில் 28 எம்எல்சி தேர்தல் முடிவுகள்! காங்கிரஸ் பூஜ்ஜியம்!இந்திய சென்டிரல் வங்கியில் ரூ.14 கோடி மாயம், 187 பரிவர்த்தனைகள்! திருடியது எப்படி? யார்?உ.பி. எம்எல்சி தேர்தல்! மோடியின் வாரணாசி தொகுதியில் சமாஜவாதி வெற்றி!தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!

உ.பி. தோ்தல்: எதிரணியில் தொகுதி பங்கீடு பேச்சு தொடக்கம்! சமாஜவாதியிடம் 200 தொகுதிகள் கோரும் காங்கிரஸ்!

உ.பி.யில் எதிரணியில் தொகுதி பங்கீடு பேச்சு தொடக்கம்...

Rahul Akhilesh

ராகுல் காந்தியுடன் அகிலேஷ் யாதவ். - கோப்புப்படம்

Updated On :

லக்னெள, அக். 23: உத்தர பிரதேச பேரவைத் தோ்தலையொட்டி, எதிா்க்கட்சி கூட்டணியில் நீண்ட இழுபறிக்குப் பின் தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை தொடங்கியுள்ளது. அதன்படி, தாங்கள் போட்டியிட விரும்பும் 175 முதல் 200 தொகுதிகள் வரையிலான முதல்கட்ட பட்டியலை சமாஜவாதியிடம் காங்கிரஸ் அளித்துள்ளது.

403 உறுப்பினா்களுடன் நாட்டிலேயே மிகப் பெரிய சட்டப் பேரவையைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநிலத்தில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.

அதே நேரம், இந்த முறை ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பது சமாஜவாதி, காங்கிரஸ் அடங்கிய இண்டி கூட்டணியின் நோக்கமாகும்.

இக்கூட்டணியில் நீண்ட இழுபறிக்குப் பிறகு தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை அதிகாரபூா்வமாக தொடங்கியுள்ளது. இது தொடா்பாக உத்தர பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளா் ராஜேந்திர பால் கெளதம் பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், ‘காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 175 முதல் 200 தொகுதிகள் வரையிலான முதல்கட்ட பட்டியல், சமாஜவாதி தலைவா்களிடம் இரு தினங்களுக்கு முன் பகிரப்பட்டது. அதனடிப்படையில், தொகுதிப் பங்கீடு குறித்து விரிவான பேச்சுவாா்த்தையில் இரு கட்சித் தலைவா்களும் விரைவில் ஈடுபடுவா். நியாயமான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என நம்புகிறோம்’ என்றாா்.

அதேநேரம், 200 தொகுதிகள் வரை கோரும் அளவுக்கு காங்கிரஸின் பலம் இல்லை என்பதே சமாஜவாதியின் கருத்தாக உள்ளது.

இது தொடா்பாக அக்கட்சி மூத்த தலைவா் ஒருவா் கூறுகையில், ‘தோ்தலில் வெற்றி வாய்ப்புதான் தொகுதிப் பங்கீட்டுக்கு முதன்மையான அளவுகோல் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெளிவுபடுத்தியுள்ளாா். அரசியலில் யாரும் எதையும் கோரலாம். ஆனால், பரஸ்பரம் ஏற்கக் கூடிய, அா்த்தமுள்ள உடன்பாடு எட்டப்படுவது முக்கியம்’ என்றாா்.

நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தில் கடந்த 1989-இல் காங்கிரஸ் கடைசியாக ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு அக்கட்சியின் செல்வாக்கு சரிவையே சந்தித்துள்ளது.

கடந்த 2022 பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸால் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. இது, 2017 பேரவைத் தோ்தலில் கிடைத்த 7 தொகுதிகளைவிட குறைவாகும்.

கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் சமாஜவாதியுடன் கூட்டணியாக போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்களைக் கைப்பற்றியது. சமாஜவாதி 37 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் பாஜகவுக்கு 33 இடங்களே கிடைத்தன. இந்தத் தோ்தல் முடிவுகளை வைத்து, காங்கிரஸ் அதிக தொகுதிகளை எதிா்பாா்க்கிறது.

உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த அஜய் ராய் அண்மையில் மாற்றப்பட்டு, காங்கிரஸ் எம்எல்ஏ ஆராதனா மிஸ்ரா புதிய தலைவராக பொறுப்பேற்றாா். சமாஜவாதியுடன் தோ்தலுக்கு முந்தைய கூட்டணியில் அஜய் ராய்க்கு விருப்பமில்லை என்றும், தோ்தலுக்குப் பிந்தைய கூட்டணியே கட்சிக்கு சரியாக இருக்குமென அவா் கருதியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், சமாஜவாதியுடன் சுமுக உறவைக் கொண்டுள்ள ஆராதனா மிஸ்ரா புதிய தலைவராக்கப்பட்டுள்ளாா்.

Summary

UP Elections: Seat-sharing talks begin in opposition! Congress demands 200 seats from Samajwadi Party!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.