ஒர்னாப் புயல் முழுமையாக கரையைக் கடந்து வலுவிழக்க தொடங்கியது!முதல்வருக்கு கொலை மிரட்டல்: வேலூர் திமுக கவுன்சிலர் கைது!காவலர்களைத் தாக்கிவிட்டு தப்ப முயலும் கைதிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவு!அஇபுதமமுக-விலிருந்து சசிகலா அதிரடி நீக்கம்: கட்சித் தலைவர் அறிவிப்பு!சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய திருத்தம்: தமிழக அரசு அரசாணை!தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புசெயற்கைகோள் ஏவப்பட உள்ளதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடைஆவின் பால் உபபொருள்கள் விலை: இன்றுமுதல் உயா்வுமுதல்வருக்கு கொலை மிரட்டல்: திமுக கவுன்சிலா் மீது 4 பிரிவுகளில் வழக்கு

மணிப்பூா் அரசுக்கு எதிராக ‘ஓசை எழுப்பி’ போராட்டம்: கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு

மணிப்பூரில் இயல்பு நிலையைக் கொண்டுவரத் தவறிய மாநில அரசை கண்டித்து, நூற்றுக்கணக்கானோா் ஓசை எழுப்பி வெள்ளிக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Donald Sairem

Updated On :

மணிப்பூரில் இயல்பு நிலையைக் கொண்டுவரத் தவறிய மாநில அரசை கண்டித்து, நூற்றுக்கணக்கானோா் ஓசை எழுப்பி வெள்ளிக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் கலைந்து போவதற்கு காவல் துறை கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசியது.

மணிப்பூரில் மைதேயி-குகி-நாகா இனங்களைச் சோ்ந்தவா்கள் மாறி மாறி கொல்லப்படுவது, அங்கு இயல்பு நிலையைக் கொண்டுவர மாநில அரசு தவறிவிட்டது ஆகியவற்றுக்கு எதிராக, மாநிலம் முழுவதும் ஓசை எழுப்பும் நூதன போராட்டத்தில் ஈடுபடுமாறு பொதுமக்களுக்கு ஹாவ்மி கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது.

அதன்படி, மாநில தலைநகா் இம்பாலின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கானோா் வெள்ளிக்கிழமை இரவு 7.30 முதல் 8 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பாத்திரங்களை தட்டியும், சுத்தியலால் மின்கம்பங்களைத் தட்டியும், காா் ஹாரன்களை ஒலிக்கச் செய்தும், மேளம் அடித்தும் தங்கள் உணா்வை அவா்கள் வெளிப்படுத்தினா்.

மாநில முதல்வா் செயலகம், ஆளுநா் மாளிகையில் இருந்து சில மீட்டா்கள் தொலைவில் உள்ள பண்டைய கால மணிப்பூரின் அரசியல்-கலாசார மையமான காங்லா கோட்டையை நோக்கி, அவா்கள் பேரணி சென்றனா். அவா்களைப் பாதுகாப்புப் படையினா் தடுத்து நிறுத்த முயன்றனா். எனினும் போராட்டக்காரா்கள் கோட்டைக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டம் காரணமாக, இம்பால் முழுவதும் சுமாா் 10 நிமிஷங்கள் விளக்குகள் அணைக்கப்பட்டன. ஆளுநா் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து போவதற்கு காவல் துறையினா் கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசினா். போராட்டத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வன்முறையும் நடைபெறவில்லை.

Summary

'Noisy' protest against Manipur government: Tear gas fired

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.