சௌரவ் தாஸ், ஆசுதோஷ் ரன்காவை விடுவிக்க தில்லி சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் உத்தரவு
நீதிமன்றக் காவலில் இருந்த சிஜேபி தலைவர்கள் அசுதோஷ், சௌரவ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறித்து...

சிஜேபி தலைவர்கள் அசுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ். - படம் - பிடிஐ
தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த வாரம் அத்துமீறி நுழைந்து முழக்கமிட்டது தொடர்பாக கைதாகி நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த சிஜேபி நிர்வாகிகள் செüரவ் தாஸ், ஆசுதோஷ் ரன்கா ஆகியோரை விடுவிக்க தில்லி சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் (எஸ்இஎம்) புதன்கிழமை உத்தரவிட்டார்.
குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் மந்திர் மார்க் காவல் நிலையத்தில் சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இருவரது சார்பில் உத்தரவாத பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, அவர்களை விடுவிக்க சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
முன்னதாக, விசாரணையின்போது தில்லி காவல் துறை சார்பில் இருவரது நீதிமன்றக் காவலையும் மேலும் மூன்று நாள்களுக்கு நீட்டிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. இதே விவகாரத்தில் தங்களுக்கு விதிக்கப்பட்ட நீதிமன்றக் காவலுக்கு எதிராக சௌரவ் தாஸ், ஆசுதோஷ் சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை பரிசீலித்த தில்லி உயர்நீதிமன்றம், இதே விவகாரத்தில் இருவரது நீதிமன்றக் காவலும் புதன்கிழமை முடிவடையவிருப்பதால், மாஜிஸ்திரேட் முடிவு தெரியும்வரை மனுதாரர்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறியது.
ஜந்தர் மந்தர் போராட்டக் களத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அமைதிப் பத்திரத்தில் கையொப்பமிட்ட பிறகு விதிகளை மீறியதாகவும் கூறி செüரவ் தாஸýம், ஆசுதோஷ் ரன்காவும் தில்லி காவல் துறையினரால் கடந்த அக். 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, அக்.14-ஆம் தேதி முதல்கட்டமாக அவர்களை ஐந்து நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, இருவரது நீதிமன்றக் காவலும் அக். 19-ஆம் தேதி வரையும், பின்னர் மேலும் இரண்டு நாள்களுக்கு புதன்கிழமை வரையும் நீட்டிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் சௌரவ் தாஸ், ஆசுதோஷ் ரன்கா மீது ஜந்தர் மந்தர் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக ஒரு வழக்கு கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. ஜந்தர் மந்தரில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி அலுவலக பிரதிநிதிகளின் புகார் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை தில்லி குற்றப் பிரிவுக்கு நகர காவல் துறை தலைமையகம் மாற்றி உத்தரவிட்டது.
இதேபோன்று, ஜந்தர் பகுதியில் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, அமைதி ஒப்பந்தத்தை மீறி பொது இடத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக மற்றொரு வழக்கு நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கும் தில்லி குற்றப் பிரிவு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Summary
CJP leaders Ashutosh and Saurav, who were in judicial custody, were released on Wednesday (Oct. 21).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


