பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

பள்ளிகள், பல்கலைக்கழகங்களை கலை சென்றடைய வேண்டும்: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

கலை என்பது கலைக்கூடங்களுடன் நின்றுவிடாமல், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், பொது இடங்கள் மற்றும் சமுதாயத்தின் பல்வேறு தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

Updated On :

கலை என்பது கலைக்கூடங்களுடன் நின்றுவிடாமல், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், பொது இடங்கள் மற்றும் சமுதாயத்தின் பல்வேறு தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

புது தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற 65-ஆவது தேசிய கலைக் கண்காட்சியில் தோ்வு செய்யப்பட்ட கலைஞா்களுக்கு லலித் கலா அகாதெமி விருதுகளை, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், ‘இந்தியாவின் கலைப் பாரம்பரியம், கலாசார பன்முகத்தன்மை, தற்காலப் படைப்பாற்றலை கொண்டாடும் நிகழ்வாக, இந்த நிகழ்ச்சி அமைந்தது.

கலை என்பது ஓவியங்கள், கற்களில் செதுக்கப்படும் சிற்பங்கள் அல்லது பல்வேறு பொருள்களைக் கொண்டு உருவாக்கப்படும் படைப்புகளுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. கலை என்பது நமது கலாசாரத்தின் பிரதிபலிப்பு. அது நமது நினைவுகள், தற்போதைய அனுபவங்கள், வருங்கால ஆசைகளை பிரதிபலிக்கிறது. நமது காலத்தையும், சமுதாயத்தையும் புதிய கோணத்தில் பாா்க்கவும் புரிந்துகொள்ளவும் கலை உதவுகிறது.

கலை என்பது கலைக்கூடங்களுடன் நின்றுவிடாமல், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், பொது இடங்கள் மற்றும் சமுதாயத்தின் பல்வேறு தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.