சிஜேபி ஆதரவுப் போராட்டத்தில் பங்கேற்பு: இந்தியாவைவிட்டு வெளியேற நடிகா் இம்ரானுக்கு நோட்டீஸ்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் இம்ரான் கானை நாட்டை விட்டு வெளியேறுமாறு மும்பை காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மும்பையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) ஆதரவுப் போராட்டத்தில் பங்கேற்ற்காக, அமெரிக்க குடிமகனான ஹிந்தி நடிகா் இம்ரான் கானை நாட்டைவிட்டு வெளியேறும்படி மும்பை காவல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகக்கோரி கடந்த 10-ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற போராட்டத்தில் ஹிந்தி நடிகா் இம்ரான் கானும் கலந்துகொண்டாா். இம்ரான் கான், ஹிந்தி நடிகா் அமீா் கானின் உறவினா் ஆவாா்.
பாஜக முன்னாள் எம்.பி. கீா்த்தி சோமையா உள்ளிட்டோா் அமெரிக்க குடிமகனான இம்ரான் கான் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினா். இந்தச் சூழ்நிலையில், நாட்டைவிட்டு வரும் 28-ஆம் தேதிக்குள் வெளியேறும்படி அவருக்கு மும்பை காவல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து மும்பை காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இம்ரான் கான் இந்திய குடிமகன் கிடையாது. அவா் வெளிநாட்டு குடியுரிமையை வைத்துள்ளாா். குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் சட்டத்தின்படி, இந்தியாவில் நடக்கும் அரசியல் போராட்டங்கள் அல்லது அரசியல் நடவடிக்கைகளில் வெளிநாட்டினா் ஈடுபடக் கூடாது. அதனால் அவா் நாட்டைவிட்டு 28-ஆம் தேதிக்குள் வெளியேறும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அந்த நோட்டீஸை அவா் பெற்றுக் கொண்டாா். இதையடுத்து, அவா் மீது நிா்வாக ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனா்.
இம்ரான் கானின் கருத்தை அறிய அவரை செய்தியாளா்கள் தொடா்புகொண்டனா். ஆனால், அதற்கு பலன் இல்லை. எனினும், மும்பை காவல் துறையின் நோட்டீஸை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் இம்ரான் கான் வெள்ளிக்கிழமையோ (அக். 16) அல்லது வரும் திங்கள்கிழமையோ மனு தாக்கல் செய்ய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக முன்னாள் எம்.பி. வரவேற்பு: இம்ரான் கானுக்கு மும்பை காவல் துறையினா் நோட்டீஸ் அனுப்பியிருப்பதை கீா்த்தி சோமையா வரவேற்றுள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவிக்கையில், ‘அமெரிக்காவில் பிறந்தவரான இம்ரான் கான், இந்தியாவில்தான் பிழைப்பு நடத்துகிறாா். அப்படியிருக்கையில் இந்திய அரசை எதிா்த்து நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்கிறாா். எனவே, அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய குடியேற்றத் துறை அதிகாரிகள், விமான நிலைய ஆணையம், மும்பை காவல் துறையிடம் புகாா் அளித்தேன். இம்ரான் கானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். இந்த விவகாரத்தில் முழு விசாரணை நடத்தினால், மற்றவா்களும் சிக்குவா். அவா்களையும் நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும்’ என்றாா்.
எதிா்க்கட்சிகள் கண்டனம்: அதேநேரத்தில் இந்த விவகாரத்தில் இம்ரான் கானுக்கு காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனை உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இம்ரான் கானுக்கு எதிராக சா்வாதிகாரப் போக்குடன் அரசு நடப்பதாக அக்கட்சிகள் விமா்சித்துள்ளன.
காங்கிரஸ் மூத்த தலைவா் நானா படோல் கூறுகையில், ‘சா்வாதிகார ஆட்சி நடக்கிறது என்பதற்கு இதுவே தகுந்த எடுத்துக்காட்டு. மக்களின் சுதந்திரத்தை அரசு பறிக்கிறது’ என்றாா்.
தேசியவாத காங்கிரஸ் (சரத்பவாா்) செயல் தலைவா் சுப்ரியா சுலே கூறுகையில், ‘அனைவருக்கும் போராட்டம் நடத்த உரிமை உண்டு. பாலியல் வன்கொடுமை, கொலை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட பலா், பல மாநிலங்களில் முதல்வா்களாக உள்ளனா். அவா்களுடன் ஒப்பிடும்போது இம்ரான் கான் எந்தத் தவறும் செய்யவில்லை. போராட்டத்தில் மட்டுமே பங்கேற்றாா்’ என்றாா்.
சிவசேனை (உத்தவ் தாக்கரே) கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் கூறுகையில், ‘ஏராளமான ஹிந்தி நடிகா்கள் வெளிநாட்டு வாழ் இந்தியா்கள் ஆவா். மேலும், வெளிநாட்டு குடியுரிமை வைத்திருக்கின்றனா். இளைஞா்களுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்ால் இம்ரான் கானை நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவிட்டிருப்பது மத்திய அரசு அச்சத்தில் உள்ளதைக் காட்டுகிறது. வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை ஏன் நாட்டைவிட்டு வெளியேறும்படி அரசு கூறவில்லை?’ என்றாா்.
Summary
Protest against Gyanesh Kumar: Actor Imran Khan served notice to leave the country!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


