மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

பிரதமர் குறித்து அவதூறு: ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

மோடி அவதூறு வழக்கு பற்றி...

Rahul Gandhi

ராகுல் காந்தி - file photo

Updated On :

பிரதமர் மோடிக்கு எதிராகக் கருத்துகள் தெரிவித்ததாக ராகுல் காந்தியின் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக, ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அபரேஷ் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, புகாரர்தாரதாரான எம்.எச். ஸ்ரீஷ்ரிமல் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது.

விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள மேல் நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட வேண்டும் என்று அமர்வு உத்தரவிட்டது. தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை (நீதிமன்ற அழைப்பாணை) ரத்து செய்ய மறுத்த மும்பை உயர் நீதிமன்றத்தின் செப்டம்பர் 8-ஆம் தேதி உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ரேபரேலி எம்.பி.யான ராகுல் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி, இவ்விஷயத்தில் சட்டம் ஏற்கெனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், விசாரணைக்காக இந்த வழக்கை நான்கு வாரங்களுக்குப் பிறகு அந்த அமர்வு பட்டியலிட்டது என்று கூறியது.

வழக்கின் பின்னணி

ராஜஸ்தானில், 2018ல் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாகக் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பிரதமர் மோடி பெயருடைய அனைவரும் திருடர்கள் என்றும் விமர்சித்தார். இதுதொடர்பாக, மகாராஷ்டிரத்தின் கிர்காம் நீதிபதி நீதிமன்றத்தில் பாஜக பிரமுகர் ஸ்ரீஷ்ரிமால் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.