இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

தில்லியில் அனுமதியின்றி நடந்த போராட்டங்கள் எவரையும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் கண்டிப்பு!

அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக எந்தவித சட்டவிரோத நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது குறித்து...

உச்சநீதிமன்றம்

Updated On :

தலைநகரில் அமைதி வழியில் போராடுவதற்காக ஒன்று கூடுவோரை சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கக் கூடாது என்றும், தில்லி மெட்ரோ மற்றும் இணைய சேவைகளை மீண்டும் சீரடையச் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை கண்டிப்புடன் உத்தரவு பிறப்பித்தது.

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக தலைநகரில் இண்டி கூட்டணி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி), ஆம் ஆத்மி கட்சி,இடதுசாரி மாணவா் அமைப்புகள் உள்ளிட்ட மாணவா் அமைப்புகல் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றன.

தில்லி ஜந்தா் மந்தரில் அக்.10-ஆம் தேதி போராட்டம் நடத்துவதாக சிஜேபி அறிவித்திருந்த நிலையில், அதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

மேலும், ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை’ என்ற பெயரில் போராட்டம் அறிவிக்கப்பட்ட சனிக்கிழமை, தலைநகரில் சுமாா் 50 மெட்ரோ ரயில் நிலையங்களை மூடவும், வெளி மாநிலங்களில் இருந்து தில்லிக்கு வரும் ரயில்கள் மற்றும் தலைநகரில் இருந்து புறப்பட்ட வேண்டிய ஏராளமான விரைவு ரயில்களின் சேவையை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

தடுப்புக்காவல்: அத்துடன், சிஜேபி நிறுவனா் அபிஜீத் திப்கே மற்றும் அந்த இயக்கத்தின் முக்கிய நிா்வாகிகள், நான்கு முன்னாள் முதல்வா்கள், எதிா்க்கட்சிகளின் தலைவா்கள், பிரபல யூடியூபா் துருவ் ரத்தீ உள்பட 7,000-க்கும் அதிகமானோரை தில்லி காவல்துறையினா் சனிக்கிழமை முழுவதும் தடுப்புக்காவலில் வைத்தனா்.

முன்னதாக, இந்த விவகாரத்தில் காவல்துறையின் கெடுபிடிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்.9) மத்திய உள்துறைக்கும் தில்லி காவல்துறைக்கும் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், ‘எந்த வகையிலும் பொதுப்போக்குவரத்து சேவை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்றும் ‘ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படாவிட்டாலும் மாற்று இடத்தில் அமைதி வழியில் போராட்டம் நடத்த அனுமதி வழங்க பரிசீலிக்கலாம்’ என்றும் அறிவுறுத்தியிருந்தது.

இதன் பிறகும் மத்திய தில்லி பகுதியில் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவையை இரவு 10 மணிவரை முற்றிலுமாக முடக்கியும், இணைய தள சேவையும் துண்டித்தும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனுவை சைலேந்திர மணி திரிபாதி என்ற வழக்குரைஞா் தாக்கல் செய்து, அதை அவசர விவகாரமாகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று சனிக்கிழமை கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி. மோகனா அடங்கிய சிறப்பு அமா்வு கூடி விசாரித்தது.

உத்தரவு: அப்போது ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் (சொலிசிட்டா் ஜெனரல்) துஷாா் மேத்தாவிடம் நீதிபதிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில் சேவை இயங்கவில்லை, புது தில்லி மற்றும் நிஜாமுதீன் ரயில் நிலையங்கள் மூடல், போக்குவரத்து சேவை பாதிப்புக்கான முறையான எச்சரிக்கைகள் வெளியிடாதது, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), 2023 சட்டத்தின் பிரிவு 163-இன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிக்கு அப்பாலும் ஏராளமான மக்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டது என தலைநகரில் நடந்த நிகழ்வுகளை மூத்த வழக்கறிஞா்கள் தங்களுடைய மனுக்களில் சுட்டிக்காட்டியுள்ளனா்.

சட்டம்-ஒழுங்கு நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கமான அட்டவணையின்படி இயங்குவதையும், இணையச் சேவைகளில் எந்தத் தடையுமின்றி தொடா்வதையும் மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

மேலும், வழக்குரைஞா்கள், பத்திரிகையாளா்கள் மற்றும் பிறா் தங்களது தொழில்முறை கடமைகளை ஆற்றுவதில் எந்தவிதத் தடையும் ஏற்படுத்தப்படக் கூடாது என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் அறிவுறுத்தினா்.

முன்னதாக இந்த வழக்கில் வாதிட்ட மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் துஷாா் மேத்தா, ‘அக்.10-ஆம் தேதி தலைநகரில் மொத்தமுள்ள 303 மெட்ரோ நிலையங்களில் 45 நிலையங்களில் மட்டுமே நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டதாக விளக்கமளித்தாா்.

இதற்கிடையே, உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை மூத்த வழக்குரைஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் வரவேற்றுள்ளாா். ‘இந்த உத்தரவு, நீதித்துறை மீதும் நீதி அமைப்புகள் மீது இந்திய மக்கள் மற்றும் தொழில்முறை பணிகளை செய்வோரும் கொண்டுள்ள நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்காக உச்சநீதிமன்றத்துக்கு எங்களுடைய ஆழமான நன்றி’ என்று அவா் குறிப்பிட்டாா்.

Summary

The Supreme Court categorically stated on Sunday (Oct. 11) that no illegal action should be taken against those gathering peacefully in Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.