இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

கார்கில் போரில் பங்கேற்ற நானா படேகர்..! அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு ஓர் அறிவுரை!

மறைந்த பாலிவுட் நடிகர் நானா படேகரின் கார்கில் போர் அனுபவம் குறித்து...

Kargil War, Nana Patekar

கார்கில் போர், நானா படேகர் - படங்கள்: ENS, Kaun Banega Crorepati

Updated On :

மறைந்த பாலிவுட் நடிகர் நானா படேகரின் தனது நடிப்பை பாதியில் நிறுத்தி அரசிடம் அனுமதி பெற்று கார்கில் போரில் பங்கேற்றது குறித்து கௌன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பேசியது மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.

இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகர் நானா படேகர் தனது 75 வயதில் கோவாவில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

ஹிந்தியிலும் மராத்தியிலும் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்து சிறந்த குணச்சித்திர, வில்லன் கதாபாத்திரங்களுக்கு பல விருதுகளையும் வென்றார். தமிழில் பொம்மலாட்டம் திரைப்படத்தில் தனித்துவமான கவனம் பெற்ற நானா படேகர் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து காலா திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.

நானா படேகர் தனது சினிமா வாழ்க்கையில் பிரஹார்: தி ஃபைனல் அட்டாக் (1991) ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்காக மராத்தா லைட் இன்ஃபான்ட்ரி உடன் 3 ஆண்டுகள் பயிற்சி செய்திருந்தார். கார்கில் போர் குறித்து அவர் பேசியிருப்பதாவது:

கார்கில் போரின்போது நானும் அதில் பங்கேற்க விரும்பினேன். மூத்த ராணுவ வீரரிடம் இது குறித்து கேட்டபோது பாதுகாப்பு அமைச்சரிடம் அனுமதி வாங்க வேண்டும் எனக் கூறினார்.

எனக்கு அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜியார்ஜ் ஃபெர்னான்டஸை தெரியும். அவரை அழைத்தேன். அவரும் இதற்கெல்லாம் வாய்ப்பில்லை எனக் கூறினார். ராணுவத்தில் ஆறு மாதம் பயிற்சி இருந்தால் போதும் என்பார்கள் நானோ 3 ஆண்டுகள் வேலை செய்துள்ளேன் என்று கூறினேன்.

எங்கு எப்போது என அவர் கேட்க நான் எனது மராத்தா லைட் இன்ஃபான்ட்ரி அனுபவம் குறித்து பேசினேன். 'நீங்கள் எப்போது செல்ல விரும்புகிறீர்கள்?’ என அவர் கேட்க, ’இன்றே’ எனக் கூறினேன்.

கார்கில் போர் 1999 ஆகஸ்டில் நானும் ராணுவத்துடன் பயணித்தேன். 60 நாள்கள் ராணுவத்துடன் இருந்தேன். டிராஸ், லே, குப்வாரா, பாரமுல்லா மற்றும் சோபூர் ஆகிய பகுதிகளுக்கு பயணம் செய்தேன்.

ஸ்ரீநகர் செல்லும்போது 76 கிலோ உடல் எடையில் இருந்தேன். அங்கிருந்து திரும்ப வரும்போது 56 கிலோவில் இருந்தேன். நான் விரைவு அதிரடிப் படையில் (க்யூஆர்டி) பங்காற்றினேன். பிறகு மருத்துவமனையிலும் சேவை செய்தேன்.

மருத்துவமனையில் பல வீரர்கள் காயத்துடன் சேர்க்கப்பட்டிருந்தார்கள். அதை எல்லாம் பார்க்கும்போது மிகுந்த மன வேதனை அடைந்தேன். மரணிக்கக்கூடிய இடத்தில் இருந்தவர்களை வீட்டிற்கு அனுப்பும் முன்பு போதுமான வகையில் அவர்களை அனுப்பி வைத்தோம். அங்கு 6 நாள்கள் இருந்தேன்.

ஒரு நாளில் வார்டில் இருக்கும்போது ’ஹே நானா’ என ஒருவர் கத்தினார். அவர் நீண்ட தாளில் கொண்டுவரப்பட்டிருந்தார். அவரைத் தொட்டேன். அவர் எறிந்து கொண்டிருந்தார். அவர் தனக்கு 4 நாள்களாக காய்ச்சல் இருப்பதாகக் கூறினார். அவர் தனது வெட்டப்பட்ட கால்களை காண்பித்தார். நாட்டிற்கு சேவை செய்வதும் ஒருவகையில் ஹீரோயிசம்தான்.

நான் நடிகர் நடிகைகளிடம் இதைத்தான் சொல்வேன். உங்களுக்கென தனியான மகிழ்ச்சி, சோகம் என்றிருக்கும். அந்த மனநிலையில் இருந்துதான் நடிப்பீர்கள். உங்களது மகிழ்ச்சி, துக்கத்தின் பார்வைகள் மாறாத வரைக்கும் உங்களால் அதிக நாள்கள் நடிக்க முடியாது.

உலகைச் சுற்றிப் பாருங்கள். அங்கு அனைத்து விதமான மகிழ்ச்சியும் சோகமும் இருக்கின்றன. ஆனால், மகிழ்ச்சியையும் துக்கத்தையும் பார்க்கும் உங்களது பார்வை மாறுபட வேண்டும் என்றார்.

Summary

When Nana Patekar put acting career on hold, joined Army during Kargil War

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.