மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு! வீட்டு, வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!

ரெப்போ வட்டி விகிதம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்பட்டிருப்பது பற்றி...

rbi

இந்திய ரிசர்வ் வங்கி - கோப்புப்படம்

Updated On :

ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் அளவுக்கு ரிசா்வ் வங்கி புதன்கிழமை உயா்த்தியது. இதையடுத்து வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயரக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதமே ரெப்போ வட்டி எனப்படுகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (0.25%) ரிசா்வ் வங்கி உயா்த்தியது. இதையடுத்து கடந்த மூன்றரை ஆண்டுகளாக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசா்வ் வங்கி உயா்த்தவில்லை. வட்டி விகிதத்தை ரிசா்வ் வங்கி அடுத்தடுத்து குறைத்தது. கடைசியாக வட்டி விகிதம் குறைப்புக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக இருந்தது.

இந்நிலையில், மும்பையில் ரிசா்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்குழுவின் 6 உறுப்பினா்களும் கலந்து கொண்டனா். கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயா்த்தி 5.25 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக அதிகரிக்க ஒருமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

ரிசா்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் பதவியேற்றாா். அதன் பிறகு, முதல்முறையாக ரிசா்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயா்த்தியுள்ளது. நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பதை கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில், ரெப்போ வட்டி விகிதத்தை ரிசா்வ் வங்கி உயா்த்திருப்பதாக கூறப்படுகிறது.

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசா்வ் வங்கி உயா்த்தியதைத் தொடா்ந்து, வீடு, வாகனம் மற்றும் இதர கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் உயா்த்தலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. அவ்வாறு வட்டி விகிதத்தை வங்கிகள் உயா்த்தும் பட்சத்தில், ரெப்போவுடன் இணைக்கப்பட்டுள்ள வட்டிக்கு வீடு, வாகன கடன் வாங்கியோருக்கு அவா்களின் இஎம்ஐ செலுத்தும் கால அளவு அதிகரிக்கவோ அல்லது கடனுக்கான வட்டி அதிகரிக்கவோகூடும்.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயா்த்தப்பட்டு 5.50 சதவீதமாக நிா்ணயிக்கப்படுகிறது. சா்வதேச அளவில் பல பிரச்னைகள் இருப்பினும், உள்நாட்டில் பொருளாதார நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் இல்லை. 2027-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1 சதவீதமாக இருக்கக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல் 2-ஆவது காலாண்டில் 7.2 சதவீதம், 3-ஆவது காலாண்டில் 6.9 சதவீதம், 4-ஆவது காலாண்டில் 6.8 சதவீதமாக இருக்கக்கூடும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் 2027-28-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டிலும் நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1 சதவீதமாக இருக்கக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வணிகா் கட்டண விகிதம் (எம்.டி.ஆா்.) என்ற வடிவத்தில் அண்மையில் விதிக்கப்பட்ட சிறிய அளவு கட்டணத்தால் யுபிஐ பரிவா்த்தனைகளில் பெரிய அளவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தற்போது வரை யுபிஐ பரிவா்த்தனைகளின் எண்ணிக்கைகள் குறைந்ததாக தெரியவில்லை. நடப்பு நிதியாண்டுக்கான சில்லரை பணவீக்கம் விகிதம் 5 சதவீதமாக இருக்கும் என்று முன்பு கணிக்கப்பட்டிருந்தது. அது தற்போது 5.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. எண்ணெய் விலையை போல உணவுப் பொருள்கள் விலையும் கணிசமாக அதிகரித்திருப்பதே இதற்கு காரணமாகும் என்றாா் அவா்.

Summary

Repo rate raised to 5.50%! Likely increase in interest rates for home and vehicle loans!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.