மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

எங்கள் மீது தில்லி போலீஸார் தடியடி நடத்தினர்! - ஆர்ஜேடி எம்பி குற்றச்சாட்டு!

ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதாகக் குற்றச்சாட்டு...

RJD MP Manoj Kumar Jha

ஆர்ஜேடி எம்பி மனோஜ் குமார் ஜா - ANI

Updated On :

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டம் நடத்திய இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தில்லி காவல் துறை தடியடி நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமெனவும், அவர் மீது குற்றவிசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தில்லியில் இன்று (அக். 7) போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில், காவல் துறையினர் மற்றும் இந்தியா கூட்டணியின் தலைவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், எம்பிக்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தில்லி காவல் துறையினர் கொடூரமான முறையில் தடியடி தாக்குதல் நடத்தியதாக, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் குமார் ஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுபற்றி, அவர் கூறுகையில்,

“எங்கள் மீது அவர்கள் கொடூரமான முறையில் தடியடி தாக்குதல் நடத்தினர். இதற்கு ஞானேஷ் குமார், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர்தான் பொறுப்பாவார்கள்.

இத்தனை ஆண்டுகளில் இதுபோன்ற சம்பவங்களை நாங்கள் பார்த்ததில்லை. இது கொடூரத்தின் உச்சம். உங்களின் உண்மையான முகம் வெளிப்பட்டுவிட்டது. நீங்கள் அனைவரும் கோழைகள்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரைக் காவல் துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றி வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

Summary

police resorted to a lathi-charge against INDIA bloc MPs who were protesting to demand the resignation of CEC Gyanesh Kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.