இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

தில்லியில் ஞானேஷ் குமாருக்கு எதிராக இன்று மீண்டும் போராட்டம்! மாணவர்கள் கைது!

ஞானேஷ் குமாருக்கு எதிராக இன்று தில்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம் நடத்தப்படுவது குறித்து...

protest against gyanesh kumar

தில்லியில் ஞானேஷ் குமாருக்கு எதிராக மக்கள் போராட்டம்... - கோப்புப் படம்

Updated On :

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் அகில இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் மீண்டும் போராட்டம் நடத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் சட்டவிரோதமான முறையில் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, ஞானேஷ் குமாருக்கு எதிராக வெள்ளிக்கிழமை (அக்.2) தில்லியின் ஜந்தர் மந்தரை நோக்கி ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் பேரணியாகச் சென்றனர்.

இதில், ஆம் ஆத்மி மூத்த தலைவரும், தில்லி முன்னாள் முதல்வருமான அதிஷி, அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலர் எம்.ஏ. பேபி உள்ளிட்ட 700-க்கும் அதிகமானோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், ஜந்தர் மந்தரில் இன்று (அக்.3) மதியம் 1 மணி முதல் ஞானேஷ் குமாருக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடைபெறும் எனவும், அதில் தாங்கள் பங்கேற்பதாகவும், நேஹா போரா, திரிணாமூல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற போராட்டத்திலும் காவல் துறையினர் தங்களைக் கைது செய்த பிறகு தாக்குதல் நடத்துவதாக, மாணவர்கள் குற்றஞ்சாட்டும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே, மாணவர்கள், ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் போராட்டம் நடத்துவதால் ஜந்தர் மந்தர் செல்லும் சாலைகளில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

once again protest against Chief Election Commissioner Gyanesh Kumar at Jantar Mantar in Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.