வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசு தோல்வி: கே.சி. வேணுகோபால்

மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசு தோல்வியுற்றதாக கே.சி. வேணுகோபால் தெரிவித்தது குறித்து...

News image

கே.சி. வேணுகோபால் - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 8:27 pm IST

மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசு தோல்வியுற்றதாக காங்கிரஸ் பொதுச்செயலரும், மக்களவை எம்.பி.யுமான கே.சி. வேணுகோபால் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

மேற்காசியாவில் நிலவிவரும் போர்ச்சூழல் காரணமாகவும் உலகலவில் முக்கிய எண்ணெய் வழிப் போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணை வழக்கம்போல் இயங்காமல் உள்ளதாலும் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயரந்துகொண்டே இருக்கிறது.

இதனால் சுமார் நான்கு ஆண்டுகளாக உயராமல் இருந்த பெட்ரோல், டீசலின் விலை கடந்த இரண்டு வாரங்களில் 4 முறை உயர்ந்துள்ளது.

அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 7.2, டீசல் விலை ரூ. 7.38 என்ற அளவு உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு காரணமாக சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 107.77-ஆகவும், டீசல் ஒரு லிட்டா் ரூ. 99.55 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து பேசிய கே. சி. வேணுகோபால், “மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ரனர். அவர்களுடைய கவலைகளைத் தீர்க்க மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடுமையான சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

நாட்டில் வேலை வாய்ப்பின்மை, உச்சத்தில் இருக்கிறது. வேலை தேடுவதில் இளைஞர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

Summary

K.C. Venugopal, Congress General Secretary and Lok Sabha MP, stated on Monday that the Central Government has failed to resolve the people's issues.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.