பெங்களூரு : கர்நாடக முதல்வராகத் தான் பதவியேற்பேனா என்பதற்கு காலம் பதில் சொல்லும் என்று அம்மாநில துணை முதல்வர் டி. கே. சிவகுமார் வியாழக்கிழமை(மே 21) தெரிவித்தார்.
கர்நாடகத்தில் கடந்த தேர்தலில் வென்ற காங்கிரஸ் ஆட்சியமைத்து மூன்றாண்டுகளை நிறைவு செய்துவிட்ட நிலையில், அம்மாநில அரசு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் முதல்வரும் மாற்றப்படலாம் என்றும் இது குறித்து, காங்கிரஸ் தலைமை விரைவில் முடிவெடுக்கும் என்று உள்கட்சி வட்டாரத்தில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. விரைவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் ஆகிய இருவரையும் தில்லிக்கு அழைத்து இது குறித்து, கட்சித் தலைமை ஆலோசனையில் ஈடுபடவிருப்பதாகவும் தாங்கள் எதிர்பார்ப்பதாக கர்நாடக காங்கிரஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சிவகுமாரிடம், ‘முதல்வராகப் பதவியேற்பீர்களா?’ என்று சாமராஜநகரத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதிலில், “காலமும் முகூர்த்தமும் பதில் சொல்லும்” என்றார்.
Summary
Karnataka Deputy Chief Minister D K Shivakumar reiterated on Thursday that time will answer whether he will become the CM of the state.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைச்சர்களுக்குத் துறை ஒதுக்குவது கட்சித் தலைமையின் முடிவு! - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பேச்சு!

கர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!

கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் டி.கே. சிவகுமார்!

கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் நாளை பதவியேற்பு! ராகுல், கார்கே பங்கேற்பு!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



