மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் முன்னிலையில் உள்ளனர். ஆனால், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவில் உள்ளார்.
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுவை சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
அஸ்ஸாம் மற்றும் புதுவையில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. தமிழ்நாடு, கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் நிலையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் தவெகவும், கேரளத்தில் காங்கிரஸும், மேற்கு வங்கத்தில் பாஜகவும் ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
இன்று காலை முதல் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்து வந்தனர்.
இந்த நிலையில், 11-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் 7,111 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 9 வது சுற்று முடிவில் மமதா பானர்ஜி 38,328 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
கொளத்தூரில் 10 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் 8,406 வாக்குகள் பின்னடைவில் இருக்கிறார்.
Summary
Mamata, Pinarayi Lead! Stalin Continues to Trail!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

3 முதல்வர்கள்: எஸ்ஐஆரில் நீக்கப்பட்ட வாக்குகளும் தோல்வி வித்தியாசமும்!
மேற்கு வங்கம்: பாஜக - 177, திரிணமூல் - 107; பவானிபூரில் மமதா மீண்டும் முன்னிலை!

பவானிபூரில் மமதா பின்னடைவு! இரு தொகுதிகளிலும் சுவேந்து அதிகாரி முன்னிலை!

பாஜக சொல்வதை அதிகாரிகள் செய்கிறார்கள்! என் கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா
விடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு



